Sachin - சச்சின் தோல்வி படமா?.. அந்தப் படத்தால்தான் இந்த நிலைமை - தயாரிப்பாளர் ஓபன் டாக்

சென்னை: Sachin (சச்சின்) விஜய் நடித்த சச்சின் படம் தோல்வி படமா என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு மனம் திறந்து பேசியிருக்கிறார்.

முன்னணி நடிகரான விஜய் இப்போது கமர்ஷியல் பாதையில் ராஜபாட்டை நடத்திவருகிறார். ஆனால் அவர் தனது கரியரின் ஆரம்பத்தில் துள்ளாத மனமும் துள்ளும், குஷி, ப்ரியமானவளே என ஃபீல் குட் படங்களில் நடித்தார். அந்தப் படங்களும் மெகா ஹிட்டாகின. அப்படிப்பட்ட விஜய்யை இன்னும் ஒருமுறை பார்த்துவிட வேண்டுமென்று இன்னமும் அவரது ரசிகர்களுக்கு ஒரு எண்ணம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

Kalaipuli S. Thanu Opens up About Vijay Sachin Movie Result

ஃபீல் குட் சச்சின்: விஜய் நடித்த ஃபீல் குட் படங்களில் சச்சின் படத்துக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கிய அந்தப் படம் கடந்த ஆம் ஆண்டு வெளியானது. விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்தை இப்போது யூ ட்யூப் மற்றும் டிவி சேனல்களில் பார்த்து ரசிகர்கள் ரசித்துவருகின்றனர். ஊட்டி பேக் ட்ராப்பில் விஜய் அந்தப் படத்தில் அவ்வளவு க்யூட்டாக இருப்பார்.

விஜய் - வடிவேலு கலக்கல் காம்போ: விஜய்யும், வடிவேலுவும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கின்றனர். அவர்கள் காம்போவில் காமெடிகளும் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக சச்சின் படத்தில் இருவரும் சேர்ந்து பற்ற நகைச்சுவை சரவெடி பல வருடங்கள் கடந்தாலும் சிரிப்பை வரவைத்துக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு இருவருக்குமான கெமிஸ்ட்ரி சச்சின் படத்தில் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.

Kalaipuli S. Thanu Opens up About Vijay Sachin Movie Result

சந்திரமுகியுடன் கோதாவில் குதித்த சச்சின்: சச்சின் திரைப்படம் கடந்த ஆம் ஆண்டு வெளியானது. அதனுடன் ரஜினி நடித்த சந்திரமுகி படமும் வெளியானது. பாபா படத்தின் தோல்விக்கு பிறகு சந்திரமுகி படத்தில் ரஜினி நடித்திருந்தார். படமானது 805 நாள்கள் திரையரங்குகளில் சாதனை படைத்தது. இதனால் சச்சின் படம் வெளியான தடம் தெரியாமல் போனது. இதன் காரணமாக சச்சின் படம் தோல்விப் படம் என்ற பேச்சு கோலிவுட்டில் இன்றுவரை உண்டு.

மனம் திறந்த தயாரிப்பாளர்: இந்நிலையில் சச்சின் படம் தோல்விப் படமா என்பது குறித்து அப்படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு மனம் திறந்து பேசியிருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், "சச்சின் படத்தை தோல்வி படம் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அது பெரிய வெற்றிப்படம்தான். அந்தப் படமானது 200 நாள்கள் ஓடியது. என்ன ஒன்று சந்திரமுகி படம் சச்சினுடன் வெளியாகி மெகா ஹிட்டானதால் இது அனைத்தும் வெளியே தெரியாமல் போய்விட்டது" என்றார்.

Kalaipuli S. Thanu Opens up About Vijay Sachin Movie Result

லியோ: விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். காஷ்மீரில் ஷூட்டிங் முடிந்த சூழலில் இப்போது சென்னை பையனூரில் ஷூட்டிங் நடந்துவருகிறது. அங்கு விஜய்க்கும், சஞ்சய் தத்துக்கும் இடையேயான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. லியோ படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X