சூர்யா குடும்பத்துல புகுந்த ஆமை.. ஞானவேல் ராஜாவை வெளுத்த கலைப்புலி எஸ். தாணு.. மாறன் ட்வீட்!
சென்னை: சூர்யா குடும்பத்தில் ஆமை போல ஞானவேல் ராஜா புகுந்து விட்டார் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரச்சனைக்கும் அவர் தான் காரணம் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசிய த்ரோபேக் வீடியோவை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ளார்.
இயக்குநர் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா பிரச்சனை பெரிதாகிக் கொண்டே போகிறது. 2007ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் பஞ்சாயத்து தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஞானவேல் ராஜா சொல்வது பொய் என சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் களமிறங்கிய நிலையில், கலைப்புலி எஸ். தாணுவும் ஞானவேல் ராஜா பற்றி பேசிய வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
டிரெண்டிங்கில் பருத்திவீரன்: மன்சூர் அலி கான் - திரிஷா விவகாரம் கடந்த ஒரு வாரமாக எரிந்துக் கொண்டிருந்த நிலையில், அடுத்த சர்ச்சையாக பருத்திவீரன் விவகாரம் வெடித்துள்ளது. #Paruthiveeran ஹாஷ்டேக்கை சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து ஞானவேல் ராஜா அமீருக்கு துரோகம் செய்து விட்டார் என பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா குடும்பத்தில் புகுந்த ஆமை: ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நன்றாக இருந்த சூர்யா குடும்பத்துக்குள் ஆமை புகுந்தது போல புகுந்து விட்டார் என கலைப்புலி எஸ். தாணு பேசிய வீடியோவை தற்போது ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்து கலைப்புலி தாணு ஞானவேல் ராஜாவை பாராட்டிய போது எடுத்தது என வஞ்சப்புகழ்ச்சி அணியில் கலாய்த்துள்ளார்.
சிவகார்த்திகேயன் பிரச்சனை: மிஸ்டர் லோக்கல் படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு சொன்ன சம்பளத்தை கொடுக்காமல் பல ஆண்டுகள் ஏமாற்றி வழக்கு போட்டு பிரச்சனை பண்ணியதும் ஞானவேல் ராஜா தான் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஏகப்பட்ட பிரச்சனைகள் அவரை சுற்றி வருகின்றன என்றும் வெளுத்து வாங்கி உள்ளார்.
யோக்கியதை இருக்கா?: 3 முறை ரிலீஸ் தேதியை அறிவித்தும் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருக்குற, ஒரு படத்தை ரிலீஸ் செய்ய யோக்கியதை இல்லாத நீயெல்லாம் எதுக்கு தயாரிப்பாளர்னு சொல்லிக்கிற என ஞானவேல் ராஜாவை விளாசி உள்ளார் கலைப்புலி எஸ். தாணு.


Click it and Unblock the Notifications











