twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தேர்தலில் சொன்னதை செயலில் காட்டி விட்டார் ஜெ!' - கலைப்புலி சேகரன் ஐஸ்!

    By Shankar
    |

    சென்னை: தரமான, யு சான்றிதழ் பெற்ற நேரடி தமிழ் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு கொடுத்ததன் மூலம், முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் சொன்னதை செயலில் காட்டி விட்டார் என்று திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் கூறியிருக்கிறார்.

    சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி' ஜி.சேகரன் விடுத்துள்ள அறிக்கை:

    "எந்த ஒரு செயலும், தொழிலும் காட்டாற்று வெள்ளம் போல் கரையற்ற-முறையற்ற வழியில் சென்றால், அதன் விளைவுகள் சிறப்பாகவும் செம்மையாகவும் இருப்பதில்லை. கட்டுப்பாடு என்ற ஒரு கரைக்குள் தெளிந்த ஆறாக ஓடும்பொழுதுதான் தன்னை சார்ந்து உயிர்வாழும் ஜீவராசிகளுக்கும், இயற்கை நிகழ்வுகளுக்கும் நல் ஆதாரமாக, உயர்வாக, வளர்ச்சியாக அமையும்.

    சரியான படத்துக்கு வரி விலக்கு

    அதைப்போல் திரைப்பட தொழிலில் அனைவரும் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய வகையில் தமிழ் தலைப்புகளுடன், தமிழ் கலாசாரம் சார்ந்த 'யு' சான்றிதழ் பெற்ற தமிழ் நேரடி திரைப்படங்களுக்கு வரிவிலக்கும், மற்ற சான்றிதழ் பெற்ற படங்களுக்கு நிலுவையில் உள்ள வரியான மாநகராட்சி மற்றும் 'ஏ' கிரேட் நகராட்சி பகுதிகளுக்கு 15 சதவீதமும், மற்ற நகராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு 10 சதவீதமும் அறிவித்த தமிழக முதல்வருக்கு, இதுதொடர்பாக ஏற்கனவே கோரிக்கை விடுத்த சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் எல்லையில்லா நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

    சொன்னதைச் செய்தார்

    ஒட்டுமொத்தமாக அனைத்து திரைப்படங்களுக்கும் அபரிமிதமான வரி வரப்போகிறது என்ற செவி வழி செய்திகளை பொய்யாக்கி, என்றும் நன்மைக்கும், நல்லவைக்கும் பக்க துணையாக இருந்து திரைப்பட துறைக்கு நல்வழி காட்டுவேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது சொன்னதை செயலில் காட்டிய முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    சிறிய தயாரிப்பாளர்கள், சிறிய வினியோகஸ்தர்கள், சிறிய திரையரங்க உரிமையாளர்கள் வாழ்வு நலம்பெற 'டிஜிடல் ஹோம்' தியேட்டருக்கு அனுமதி அளித்து, அவர்கள் வாழ்க்கையில் மேலும் ஒளிபெற செய்ய கேட்டுக்கொள்கிறோம்.''

    இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.சேகரன் கூறியிருக்கிறார்.

    English summary
    The distributors association president Kalaipulu G Sekaran showering praises on CM Jayalalitha for her recently announced 'regulated tax free announcements' for Tamil movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X