twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேயாருக்கு எதிராக கூட்டம் - கலைப்புலி தாணு அறிவிப்பு

    By Shankar
    |

    சென்னை: ஏப்ரல் 7-ந் தேதிக்குள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் கேயாருக்கு எதிராக நாங்கள் கூட்டத்தைக் கூட்டுவோம். அதற்கு எந்தத் தடையும் இல்லை, என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.

    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர். மற்றும் நிர்வாகிகள் சிவா, ஞானவேல் ராஜா ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டி அணியான கலைப்புலி எஸ்.தாணு தரப்பினர் அறிவித்திருந்த பொதுக்குழுவைக் கூட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதாகக் கூறினர்.

    Kalaipuli Thaanu announces special meeting against Keyaar team

    மேலும், 7-ந் தேதிக்குள் பொதுக் குழுவைக் கூட்ட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், கலைப்புலி தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது தாணு கூறுகையில், "2-ந் தேதி நாங்கள் கூட்டுவதாக இருந்த சிறப்பு பேரவைக் கூட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, சில உத்தரவுகளையும் பிறப்பித்தது. அதாவது, ஏப்ரல் 7-ந் தேதிக்குள் தற்போதுள்ள கே.ஆர். தலைமையிலான நிர்வாகிகள் பேரவைக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்.

    இதற்காக, சங்க சட்ட விதி 21-ன்படி எல்லா உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியது. மேலும் அந்த அறிவிப்பில், சங்க நிர்வாக பதவியில் இருப்பவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய பொருள் இருக்க வேண்டும்.

    7-ந் தேதிக்குள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாவிட்டால், அதன்பின்னர் நாங்கள் சிறப்பு பேரவைக் கூட்டத்தை கூட்ட எங்களுக்கு உரிமையளித்திருக்கிறது நீதிமன்றம்," என்றார்.

    English summary
    Kalaipuli Thanu said that his team would convened the special general body meet of producers council whether Keyaar team failed to do it before April 7th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X