twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இணையத் திருடர்களுக்கு கலைப்புலி தாணு வைத்த அதிரடி 'செக்'!

    By Shankar
    |

    எந்தப் படமாக இருந்தாலும் வெளியாவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே திருட்டு வீடியோவாக இணையத்தில் வெளியாவது இப்போதைய கேவல ட்ரெண்டாகிவிட்டது.

    'இந்த எழவுக்கு பேசாம நாமளே பட ரிலீசின்போதே டிவிடியையும் வெளியிட்டுவிடலாம்' என்று தயாரிப்பாளர்களே சொல்லும் அளவுக்குப் போய்விட்டது அவர்கள் நிலைமை.

    Kalaipuli Thaanu files complaint on 170 illegal websites

    இப்போது கபாலி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தையும் வெளியாகும் போதோ, அதற்கு ஓரிரு தினங்களுக்குப் பிறகோ திருட்டு வீடியோவாக வெளியிட ஒரு இணையத் திருடர் கூட்டமே தயாராக உள்ளது.

    இதையெல்லாம் மனதில் வைத்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். எந்தெந்த இணைய தளங்கள் இப்படி திருட்டு வீடியோ வெளியிடுகின்றன எனக் கணக்கெடுத்த தாணு, அந்த லிஸ்டை அப்படியே கமிஷனரிடம் கொடுத்துவிட்டார்.

    இந்த இணைய தளங்கள் அனைத்தையும் உடனடியாக முடக்க வேண்டும் என ஒரு மனுவையும் கொடுத்திருக்கிறார். கபாலியை எந்த இணையதளத்திலும் திருட்டு வீடியோவாக வெளியிட அனுமதிக்கக் கூடாது என்பதில் போலீசாரும் உறுதியாக நிற்பதாகக் கூறியிருக்கிறார்களாம்.

    பார்க்கலாம்!

    English summary
    Kabali Producer Kalaipuli Thaanu has filed complaint against 170 illegal websites for releasing new movies without permission.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X