»   »  கலைப்புலி தாணு வெளியிடும் மீண்டும் ஒரு காதல் கதை!

கலைப்புலி தாணு வெளியிடும் மீண்டும் ஒரு காதல் கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் எஸ்விடி ஜெயச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள மீண்டும் ஒரு காதல் கதை படத்தை வெளியிடுகிறார் கலைப்புலி எஸ் தாணு.

இந்தப் படம் வருகிற வெள்ளி கிழமை ஆகஸ்ட் 5 வெளியாகவிருந்தது. படத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் விநியோகஸ்தர்கள் சிலர் படத்தை பார்த்தனர்.


Kalaipuli Thanu to release Meendum Oru Kadhal Kadhai

பார்த்த பிறகு, 'இந்தப் படம் நன்றாக வந்துள்ளது. ஒன்று இரண்டு வாரங்கள் தள்ளி சரியான தேதியில் வந்தால் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றி பெறும்," என்று கூறினார்.


இதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை இரு வாரங்கள் தள்ளி வெளியிட முடிவு செய்து உள்ளனர். வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி படம் வெளியாகும் எனத் தெரிகிறது.


வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார், நாசர், தலைவாசல் விஜய், அர்ஜுன், வித்யு லேகா, வெங்கட் ஆகியோர் நடித்துள்ள இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற தட்டத்தின் மறையத்து படத்தின் ரீமேக் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kalaipuli Thanu will release Meendum Oru Kadhal Kadhai movie on August 25th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil