'இந்திய சினிமாவின் பெருமை'.. அசுரன் வெளியாகி ஒரு வருடம்.. ட்விட்டரை தெறிக்கவிடும் தனுஷ் ரசிகர்கள்!
சென்னை: அசுரன் படம் ரிலீஸ் ஆகி இன்றோடு ஒரு வருடம் ஆவதை ஒட்டி, ரசிகர்கள் #1YearOfBBAsuran என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய படம், அசுரன். இதில் தனுஷ் வயதான கேரக்டரிலும் இளம் வயது தோற்றத்திலும் மிரட்டியிருந்தார்.
அவர் மனைவியாக, மஞ்சு வாரியர் நடித்திருந்தார். மலையாள நடிகையான அவருக்கு இது முதல் தமிழ்ப் படம்.

பழிதீர்க்கும் கதை
டீஜே அருணாச்சலம், கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, ஆடுகளம் நரேன், வெங்கடேஷ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகி இருந்தது. அண்ணனை கொன்றவனை தம்பி பழிதீர்க்கும் கதை. படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியானது.

100 கோடி வசூல்
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. நடிகர் தனுஷுக்கு முதல் முறையாக, 100 கோடி வசூலை ஈட்டித் தந்த படம், இது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெகா ஹிட்டான தமிழ் படமும் இதுதான். இந்தப் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

தெலுங்கு ரீமேக்
தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். ஶ்ரீகாந்த் அட்டலா இயக்கும் இதில் மஞ்சுவாரியர் கேரக்டரில், நடிகை பிரியாமணி நடிக்கிறார். தயாரிப்பாளர் தாணுவுடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. கன்னடத்திலும் ரீமேக் ஆக இருக்கிறது. அங்கு சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் தாணு
இந்நிலையில் இந்தப் படம் ரிலீஸ் ஆகி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. இதையடுத்து #1YearOfBBAsuran என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்விட்டரில் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். தயாரிப்பாளர் தாணு, இதற்கான காமன் டி.பியை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன்
ரசிகர்கள் தனுஷையும் அவர் நடிப்பையும் இயக்குனர் வெற்றிமாறனையும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். '50 வயது சிவசாமி கேரக்டரில் தனுஷ் மிரட்டியிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பும் தனித்துவமான முயற்சியில் பாராட்டக் கூடியது என்று சிலர் கூறியுள்ளனர்.
சிறப்பான நடிகர்
இயக்குனர் வெற்றிமாறன், இந்த காலத்தின் பல்துறை திறமைகொண்ட இயக்குனர். நம் தலைமுறையில் சிறப்பான நடிகர் தனுஷ் என்று பலர் கூறியுள்ளனர். மேலும் பல தனுஷ் ரசிகர்கள் அசுரன் பட ஸ்டில்களையும் வசனங்களையும் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











