twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இட்லி கிட்லி.... நந்தனார் கிந்தனார்.... - நக்கல் பாணியை அறிமுகம் செய்த கலைவாணர் என்.எஸ்.கே

    |

    சென்னை: நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர் தான். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் எம்.ஜி.ஆர் நடித்த சதி லீலாவதி. திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது, மதுரம் சத்தம் போட, அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை துவங்கி வைத்தவரும் இவர் தான்.

    நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப் போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப் போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்.

    Kalaivanar N.S.Krishnan 62nd Death Anniversary

    டென்னிஸ் பால் பொறுக்கிப் போட்டும், கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித் தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

    பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் அவனவன் ஆயிரம் பொய் சொல்றான், நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் என்றாரே பார்க்கலாம்

    விமர்சனம் ஒரு பக்கம், தமிழ் ராக்கர்ஸ் ஒரு பக்கம்: அடி மேல் அடி வாங்கும் சாஹோவிமர்சனம் ஒரு பக்கம், தமிழ் ராக்கர்ஸ் ஒரு பக்கம்: அடி மேல் அடி வாங்கும் சாஹோ

    திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட, அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.

    அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்ற மருத்துவரை புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு, இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள், அதனால் நீங்கள் அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள், என்றார் என்.எஸ்.கே.

    என்.எஸ்.கே, தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து, என்.எஸ்.கே நேரிலே வந்து, ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன்; உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா, அதான் போடலை என்றதும், அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் எம்.ஆர்.ராதா.

    என்.எஸ்.கே, லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்.

    English summary
    When a thief came home and tried to steal, T.A.Maduram made a noise, but, N.S.Krishnan got to support him and N.S.K S told he is my theater company artist.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X