twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எத்தனை நாளைக்கு இப்படி அடியாளாவே இருக்கப்போறீங்க? கலையரசனுக்காக ச்சு கொட்டும் ரசிகர்கள்!

    |

    சென்னை: ஜகமே தந்திரம் படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்தப் படத்திலும் அடியாளாகவே வந்து செல்கிறார் நடிகர் கலையரசன்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் இன்று படம் ரிலீஸ் ஆனது.

    நழுவி விழும் ஆடையில் மூச்சு முட்ட வைக்கும் நடிகை சோனம் பாஜ்வா! நழுவி விழும் ஆடையில் மூச்சு முட்ட வைக்கும் நடிகை சோனம் பாஜ்வா!

    மொத்தம் 17 மொழிகளில் 190 நாடுகளில் ஜகமே தந்திரம் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தியாவில் இன்று பகல் படம் ரிலீஸ் ஆனது.

    எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

    எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

    படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ஆதங்கப்பட்டுள்ளனர் ரசிகர்கள்.

    பாராட்டும் நடிப்பு

    பாராட்டும் நடிப்பு

    இந்தப் படத்தில் நடித்துள்ள கலையரசன் இதிலேயேயும் அடியாளாகவே நடித்துள்ளார். திறமையான நடிகரான கலையரசனின் நடிப்பு இதற்கு முன்பு பல படங்களில் பாராட்டப்பட்டுள்ளது.

    தூக்கி சாப்பிட்ட நடிகர்

    தூக்கி சாப்பிட்ட நடிகர்

    மெட்ராஸ் படத்தில் தனது வெள்ளந்தியான நடிப்பால் ஹீரோ கார்த்தியையே தூக்கி சாப்பிட்டிருப்பார் நடிகர் கலையரசன். அதன்பிறகு அவரது கதாப்பாத்திரத்தை அழுத்தமாக சொல்லும்படியான படம் எதுவும் அமையவில்லை.

    ஹீரோவுக்கு அடியாள்

    ஹீரோவுக்கு அடியாள்

    தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் சில காட்சிகளில் தான் நடித்திருப்பார் கலையரசன். பெரும்பாலும் அவர் நடித்துள்ள படங்களில் துணை நடிகராகவே வந்து செல்கிறார். ஹீரோக்கள் மற்றும் வில்லன்களுக்கு அடியாளாக நடிக்கும் கதாப்பாத்திரத்தில்தான் அதிகம் பார்க்கப்படுகிறார்.

    கிடைக்கும் வாய்ப்பில்..

    கிடைக்கும் வாய்ப்பில்..

    இன்று வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் படத்திலும் அடியாள் போல்தான் நடித்துள்ளார் கலையரசன். கலையரசன் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. பெரிய ஹீரோக்களின் படங்கள் என கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் நடித்தால் இப்படியே இருக்க வேண்டியதுதான் என்கிறார்கள் ரசிகர்கள்.

    முக்கியத்துவம் இல்லாமல்

    முக்கியத்துவம் இல்லாமல்

    நல்ல கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் மட்டுமே அவரது திரையுலக வளர்ச்சிக்கு நல்லது. தொடர்ந்து இதுபோல ஹீரோவுக்கும், வில்லனுக்கும் அடியாள் கேரக்டரிலேயே முக்கியத்துவம் இல்லாமல் நடித்துக் கொண்டிருந்தால், தொடர்ந்து துணை நடிகராகவே வலம் வர வேண்டியிருக்கும்.

    திறமைக்கு தீனி போடும்..

    திறமைக்கு தீனி போடும்..

    நல்ல நடிப்புத் திறமை உடைய அவர் தொடர்ந்து அழுத்தம் இல்லாத வேடங்களில் நடிப்பது பார்க்க ஏமாற்றமாக உள்ளது. இனியாவது தனது திறமைக்கு தீனி போடும் படங்களையும் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையையும் தேர்வு செய்வாரா கலையரசன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

    English summary
    Kalaiyarasan Character in Jagame Thandhiram is disappointing. Kalaiyarasan should be careful to choose the stories.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X