Trending X Review: கலையரசனின் 'டிரெண்டிங்' எப்படி இருக்கு?.. இப்படியொரு கதையா?.. ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் ராஜுவின் பன் பட்டர் ஜாம், கலையரசன் நடித்துள்ள டிரெண்டிங், அறிமுக நடிகர் ஆதவன் நடிப்பில் உருவாகியுள்ள கெவி மற்றும் ஜென்ம நட்சத்திரம் என 4 படங்கள் வெளியாகின்றன. இன்று மதியம் டிரெண்டிங் படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

கலையரசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் படங்களில் நடித்து வருவதால், பலரும் தன்னை ஒதுக்கி வருவதாகவும் சாதீய தீண்டாமைக்கு சினிமாவிலேயே தான் ஆளாகியிருப்பதாகவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Kalaiyarasan Trending Movie Twitter Review in Tamil

அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை, வாழை என பல படங்களில் சிறப்பான நடிப்பை கலையரசன் வெளிப்படுத்தி வருகிறார். சோலோ ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவருக்கான அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த வாரம் வெளியாக காத்திருக்கும் டிரெண்டிங் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

கலையரசனின் டிரெண்டிங்: சிவராஜ் நாகராஜ் இயக்கத்தில் கலையரசன், பிரியாலயா, பிரேம்குமார் நடிப்பில் உருவாகியுள்ள டிரெண்டிங் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். அதிக வைரலாகும் விஷயத்தை டிரெண்டிங் என அழைப்பார்கள். இதுதான் புது டிரெண்ட் என பலரும் ஒரு விஷயத்தை ஃபாலோ செய்வது வழக்கம். அப்படியொரு டைட்டிலை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ப்ளூ வேல் கேம் குறித்த கதையம்சத்தை வைத்து இயக்குநர் படமாக்கியுள்ளார். வரும் ஜூலை 18ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது.

ரமேஷ் பாலா விமர்சனம்: காதலித்து திருமணம் செய்துக் கொண்ட யூடியூபர் ஜோடி ரியல் லைஃப் ப்ளூ வேல் கேமில் சிக்கும் நிலையில், அதை அவர்கள் எப்படி சமாளித்தார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை என ரமேஷ் பாலா தனது எக்ஸ் தளத்தில் விமர்சனமாக பதிவிட்டு 3.25 ரேட்டிங் கொடுத்திருக்கிறார். கலையரசன் மற்றும் பிரியாலயாவின் நடிப்பு பிரமாதம் என்றும் வொர்த்தான படம் என்றும் தம்ப்ஸ் அப் கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் போல ரியாலிட்டி ஷோ: இயக்குநர் சிவராஜ் நாகராஜ் பிக் பாஸ் போல ஒரு ரியாலிட்டி ஷோவை திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார். கலையரசன் மற்றும் பிரியாலயா நடத்தி வந்த யூடியூப் சேனல் டீ ஆக்டிவேட் ஆக அவர்களுக்கு அவர்களது வீட்டிலேயே விளையாட ஒரு ரியாலிட்டி கேம் வருகிறது. அதற்குள் செல்லும் அவர்கள் என்ன ஆனார்கள்? படம் என்ன ஆனது? என்பது தான் இந்த படம். இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் போனை வைத்துக் கொண்டு இன்ஸ்டாகிராம் பிரபலங்களாக மாறி வரும் தலைமுறைக்கு பாடமாக இந்த படத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார் என ராஜசேகர் விமர்சனம் கொடுத்துள்ளார்.

கலையரசனுக்கு கைகொடுக்குமா?: கலையரசன் ஹீரோவாக நடித்து வரும் படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில், இந்த வாரம் வெளியாகவுள்ள டிரெண்டிங் படம் இளைஞர்களை கவர்ந்து அவருக்கு வெற்றிப் படமாக அமையுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாரமும் கடும் போட்டி திரையரங்குகளில் நிலவி வருவதை போல ஓடிடியிலும் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் டிரெண்டிங் படத்தை பார்க்க எந்தளவுக்கு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X