புண்ணிய ஸ்தலத்துக்கு ஷூட்டிங் போயிருக்கும் 'கலகலப்பு 2' டீம்! - ட்விட்டரில் வெளியான படம்
வாரணாசி : சுந்தர்.சி. இயக்கும் 'கலகலப்பு 2' படத்தில் ஜெய், ஜீவா, சிவா, சதீஷ், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ரானி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது காசியில் நடைபெற்று வருகிறது.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் 4-ம் தேதி காரைக்குடியில் துவங்கி 15 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில்தான், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காசியில் துவங்கியுள்ளது. 'கலகலப்பு 2' நடிகர்கள் காசியில் இருக்கும் புகைப்படம் ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது.

காசியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தூர், புனே, ஐதராபாத்திலும் 'கலகலப்பு 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. வட இந்தியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் சென்னை திரும்புகின்றனர் படக்குழுவினர்.
பிறகு, ஜனவரியில் பாடல்காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளனர். 'கலகலப்பு 2' படத்தின் ஷெட்யூல் இப்படி இருக்கிறது. இந்தப் படத்தால் தான் சுந்தர்.சி-யின் 'சங்கமித்ரா' படத்தின் ஷூட்டிங் தாமதமாகிறது.
ஜனவரியில் 'சங்கமித்ரா' படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. உண்மையில், அடுத்த வருட துவக்கத்தில் 'சங்கமித்ரா' பட வேலைகள் தொடங்கப்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் படக்குழுவினர்.


Click it and Unblock the Notifications











