நாஞ்சில் விஜயனுக்கு விரைவில் டும்..டும்..டும்..மணமகள் முகத்தை மறைத்து வெளியிட்ட போட்டோ!

சென்னை: நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயனின் நிச்சயதார்த்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் சிரிச்சா போச்சு, அது இது எது? உள்ளிட்ட நிகழ்ச்சியில் தனது அசாத்தியமான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தார்.

Kalakapovathu yaar Vijay television fame Nanjil Vijayan got engaged

நாஞ்சில் விஜயனுக்கு பெண் வேடங்கள் பக்காவாக பொருந்தி இருக்கும் என்பதால், பெரும்பாலும் இவர் பெண் வேடத்திலேயே நகைச்சுவை நிகழ்ச்சியில் தோன்றுவார். இவரின உடல் மொழிக்கும் , இவரின் பேச்சை ரசிப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

நாஞ்சில் விஜயன்: சின்னத்திரையில் பிரபலமான நாஞ்சில் விஜயன், தற்போது வெள்ளித்திரையிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மக்களிடம் ஓரளவுக்கு பிரபலமான இவர், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். டிக் டாக் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சூர்யா தேவியை தாக்கி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Kalakapovathu yaar Vijay television fame Nanjil Vijayan got engaged

சொந்தமாக யூடியூப் சேனல்: சிறையில் இருந்து வெளியே வந்த நாஞ்சில் விஜயனுக்கு விஜய் டிவியில் முன்பு போல நிகழ்ச்சி இல்லாததால், தனது யூடியூப் சேனலில் ஏதாவது வீடியோவை வெளியிட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், அம்மா சிறுவயதிலேயே இறந்து விட்டதால், பாரில் வேலை செய்து கொண்டே படித்ததாகவும் பெரியம்மா தான் வளர்த்ததாகவும் கூறியிருந்தார்.

Kalakapovathu yaar Vijay television fame Nanjil Vijayan got engaged

விரைவில் டும் டும் டும்: இந்நிலையில், நாஞ்சில் விஜயனின் நிச்சயதார்த்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதில், நாஞ்சில் விஜயன் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் அவரது உறவுக்கார பெண் என்று சொல்லப்படுகிறது. மேலும், அந்த புகைப்படத்தில் மணமகளின் முகத்தை மறைத்த படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நாஞ்சில் விஜயனின் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X