இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் படங்கள்... பாக்ஸ் ஆஃபிஸ்ல ஹிட் அடிக்கப் போற ஹீரோ யாரு?
சென்னை: தீபாவளியை தொடர்ந்து கடந்த வாரத்தில் இருந்து சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன.
நவம்பர் 4ம் தேதி வெளியான லவ் டுடே திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
அதேபோல், இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களில் எது பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

உதயநிதியின் கலகத் தலைவன்
பொன்னியின் செல்வன், தீபாவளி தினத்தில் வெளியான சர்தார் படங்களைத் தொடர்ந்து நவம்பர் 4ம் தேதி ரிலீஸான லவ் டுடே படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. அதேபோல், இந்த வாரம் வெளியாகும் படங்களில் உதயநிதியின் கலகத் தலைவனுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி, நிதி அகர்வால், ஆரவ் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளது. உதயதிதிக்கு கலகத் தலைவன் ஹிட் படமாக அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சசிகுமாரின் நான் மிருகமாய் மாற
அதேபோல், சசிகுமாரின் 'நான் மிருகமாய் மாற' திரைப்படமும் வரும் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சத்யா சிவா இயக்கத்தில் சசிகுமாருடன் ஹரிப்ரியா, விக்ராந்த் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படம் க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது. சவுண்ட் இன்ஜினியரான சசிகுமார், ஆக்சன் அவதாரம் எடுப்பதே இந்தப் படத்தின் ஒன்லைன் என சொல்லப்படுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள நான் மிருகமாய் மாற ட்ரெய்லர், ஏற்கனவே வெளியாகி ட்ரெண்ட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனியின் தமிழரசன்
மேலும், விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் திரைப்படமும் வரும் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த தமிழரசன் படத்துக்கு இந்த வாரம் விடிவு காலம் பிறந்துள்ளது. விஜய் ஆண்டனியுடன் சோனு சூட், சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர். வழக்கம் போல இந்தப் படத்திலும் சோசியல் மெசேஜ்ஜுடன் விஜய் ஆண்டனி களமிறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், 'காரோட்டியின் காதலி' என்ற படமும் வரும் 18ம் தேதி வெளியாகிறது. சிவா என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கதிர், கயல் ஆனந்தி கூட்டணியில் யூகி
இந்த வாரம் வெளியாகும் படங்களில், கதிர், கயல் ஆனந்தி இணைந்து நடித்துள்ள 'யூகி' படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஜாக் ஹாரிஸ் இயக்கியுள்ள இந்தப் படம், வாடகைத் தாய் பின்னணியில் க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது. நரேன், நட்டி, பவித்ரா லக்ஷ்மி ஆகியோரும் யூகி படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படமும் வரும் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், 2323 என்ற படமும் 18ம் தேதி வெளியாகிறாது. சதீஷ் ராமகிருஷ்ணன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம், மூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைப் பின்னணியில் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











