KPY Bala -அள்ளி அள்ளி கொடுக்கும் கைகள்.. KPY பாலாவுக்கா இந்த நிலைமை?.விரைவில் நலம் பெற ரசிகர்கள் வேண்டுதல்
சென்னை: Bala (பாலா) பலருக்கு உதவும் கலக்கப்போவது யாரு பாலா பகிர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியிருக்கின்றனர்.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட KPY பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனதால் அவர் KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். அந்த ஷோவுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த அவர் தற்போது மேடை நிகழ்ச்சிகளையும் கலகலவென தொகுத்து வழங்குகிறார்.

சினிமாவில் பாலா: சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரை கதவு திறக்கும் என்ற விதிக்கு ஏற்பட பாலாவுக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. ஜுங்கா, தும்பா, சிக்சர், காக்டெயில், புலிக்குத்தி பாண்டி, லாபம், ஆண்ட்டி இந்தியன், நாய் சேகர், தேஜாவூ, கனம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. இன்னும் சில படங்களிலும் அவர் கமிட்டாகியிருக்கிறார்.
பாலாவின் உதவிகள்: சினிமாவில் இப்போதைக்கு அவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் ஏகப்பட்ட பேருக்கு பல உதவிகளை செய்துவருகிறார். அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு முதலில் உதவ ஆரம்பித்த அவர் படிப்படியாக பலருக்கும் உதவ ஆரம்பித்தார். அதன்படி காமெடி நடிகர் பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் காரணமாக கால் கட்டை விரல் அகற்றப்பட்டபோது அவருக்கு உதவி செய்த வெகு சிலரில் பாலாவும் ஒருவர்.
ஆம்புலன்ஸ்: அதுமட்டுமின்றி மலை கிராம மக்கள் மற்றும் முதியோர் இல்லத்துக்கு தனது செலவில் 4 ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த சம்பவமும் பலரையும் நெகிழ செய்தது. குறிப்பாக சினிமாவில் வளர்ந்து வரும் சூழலிலேயே இப்படிப்பட்ட உதவிகளை அவர் செய்வதால் கண்டிப்பாக அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். இந்த பெரிய மனம் யாருக்கும் வந்துவிடாது என்றும் பலர் கூறுகிறார்கள்.
உடைந்த விரல்கள்: சமீபத்தில்கூட சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்ட போது குடும்பத்துக்கு தலா 1000 ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாயை வழங்கினார். அதுவும் பெரும் பாராட்டை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் பாலாவுக்கு ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது. அதாவது அவரது கை விரல்களில் இரண்டு தற்போது உடைந்திருக்கின்றன. எதனால் உடைந்தன என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
கை விரல்கள் உடைந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பாலா, 'மனம் நிறைந்தது விரல் உடைந்தது நன்றி' என குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் பலருக்கு உதவிய அந்த கைகள் கண்டிப்பாக விரைவில் நலம் பெறும் பாலா என உருக்கமாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











