Don't Miss!
- News
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு சரி! அதனால் ஏற்படும் பயன்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்!
- Finance
உலகளாவிய எண்ணெய் நெருக்கடி ஏற்படலாம்.. சவுதி அராம்கோ CEO எச்சரிக்கை.. ஏன் தெரியுமா?
- Lifestyle
இரவு நேரத்தில் மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இல்லன்னா இந்த பிரச்சனைகளை சந்திப்பீங்க..
- Sports
சிஎஸ்கேக்கு எதிராக வெறியோடு விளையாடியது ஏன்? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்.. திடீர் மாற்றம் ஏன்?
- Automobiles
22 நாளில் 22 ஆயிரம் பேர் சிக்கினர்... தமிழக போலீஸ் திடீர் அதிரடி... இனி இந்த தப்பை செய்தால் அவ்ளோதான்!
- Technology
இப்படி ஒரு ஆங்கிளில் சந்திர கிரகணத்தை யாரும் பார்த்திருக்க முடியாது.. NASA வெளியிட்ட வீடியோ..
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கன்ஃபார்மா இது கலக்கப் போவது யாரு தான்.. அபிஷேக்கையும் தாமரையையும் பங்கமாக்கிய காமெடியன்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் கிராண்ட் ஃபினாலேவில் நடந்த ஒரே உருப்படியான விஷயம் என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியையே ட்ரோல் செய்தது தான்.
நாஞ்சில் விஜயன், அஸார், பாலா என கலக்கப் போவது யாரு டீமே உள்ளே வந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர்கள் போல இமிடேட் செய்து வெளுத்து வாங்கி விட்டனர்.
அஜித்தோட பெரிய ரசிகன் நான்... மாரி 3 பத்தி யோசிக்கல... இயக்குநர் பாலாஜி வெளிப்படை
அதிலும், அபிஷேக் ராஜா மற்றும் தாமரையை பங்கமாக கலாய்த்துத் தள்ளியது தான் ஹைலைட் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆட்டோ வெயிட் பண்ணுது
பிக் பாஸ் வீட்டில் வந்ததில் இருந்து கடைசி வரை நான் இந்த விளையாட்டை ஜெயிக்க வரவில்லை என கடைசிக்கு முந்தைய வாரம் வரை இருந்த தாமரை செல்வியாக நாஞ்சில் சம்பத் நடித்து பயங்கரமாக ட்ரோல் செய்திருந்தார். தாமரை ஜெயிக்க வரலைன்னு சொல்லும் போது எல்லாம் நீங்க வந்த ஆட்டோ வெளியே வெயிட் பண்ணுது என வரும் வாய்ஸ் வேற லெவல் என்டர்டெயின்மென்ட். சில நேரங்களில் தாமரையின் முகமே மாறி விட்டது.

அபிஷேக் மரண பங்கம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அபிஷேக்கை இருமுறை அழைத்து வந்து எவிக்ட் செய்து முதல் ஆண் போட்டியாளராக அனுப்பிய நிலையில், கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கே அவர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், அபிஷேக்காக அஸார் நடித்து பிக் பாஸ் பார்க்கவில்லை என அவர் பொய்யாக நடித்தார் என்பது போஸ் ஸ்பூஃப் செய்து மரண பங்கம் செய்து விட்டனர்.

யாருடா அந்த பொண்ணு
இந்த சீசனில் இளம் பெண்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை என்பதை செம நக்கலாக நிரூப் போன்ற இமிடேட்டை வைத்து சொல்லி விட்டனர். மேலும், நீண்ட கூந்தலுடன் வந்த நிரூப்பை யாருடா அந்த பொண்ணு என போட்டியாளர்கள் ஜொள்ளு விடுவது போல பண்ண டிராமா வேற லெவல். கேபிஒய் பாலா நிரூப் கெட்டப்பில் வந்து கடைசி வரை ஸ்ட்ராட்டஜி என பேசி மொத்த சீசனையும் மொக்கை செய்து விட்டார்.

அழுகை அழகிகள்
பாவனி மற்றும் அக்ஷரா இருவருக்கும் இடையே யார் அதிக நேரம் அழுகின்றனர் என்கிற போட்டியே நடைபெற்றதை விஜய் டிவி காமெடியன்கள் வச்சு செய்து அடுத்த சீசனுக்கு எல்லாம் அழுகை ஸ்ட்ராட்டஜியை யாருமே பயன்படுத்தக் கூடாது என்பது போல செய்து விட்டனர். அனைவருடைய பர்ஃபார்மன்ஸும் சூப்பர்.