நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்வளவு எரியும்..வீதிக்கு வந்த குட்டி பத்மினி, அபிராமி சண்டை!

சென்னை : கலாக்ஷேத்ரா விவகாரத்தில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக பேசிய அபிராமியை நடிகை குட்டி பத்மினி கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு அபிராமி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

கலாக்ஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததையடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாக்ஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனை மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Kalakshetra issue Bigg Boss Abhirami replied to kutti padmini

கலாக்ஷேத்ரா விவகாரம் : இந்த விவகாரத்தில் பிக்பாஸ் அபிராமி கலாக்ஷேத்ராவிற்கு ஆதரவாக பேசி இருந்தார். கலாக்ஷேத்ரா விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமலே பேசுகிறார்கள். பத்து வருடமாக இந்த பிரச்சனை நடந்து வருகிறது என்று பேசுகிறார்கள். நானும் இங்கு நான் படித்தேன் இதுபோன்று எந்த பாலியல் தொல்லையும் எனக்கு நடந்தது இல்லை.

சர்ச்சையான பேச்சு : பாரம்பரியமான இந்த கலாக்ஷேத்ரா மீது வேண்டும் என்றே புகார் அளிக்கப்படுகிறது. கலாக்ஷேத்ரா என்று பெயரை சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் கலாக்ஷேத்ரா பற்றி பேசுகிறார்கள் என்று பேசி இருந்தார். அபிராமியின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பாடகி சின்மயி, நடிகை ஷர்மிளா என பலரும் அபிராமியின் பேச்சில் ஆணவம் தெரிகிறது. யாருக்கு மட்டுக்கொடுக்கிறார் என்று கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன.

Kalakshetra issue Bigg Boss Abhirami replied to kutti padmini

விளக்கம் கொடுத்த அபிராமி : இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, விளக்கம் கொடுத்த அபிராமி, கலாக்ஷேத்ரா பெயரை சொல்லத் தெரியாதவர்கள் இதைப்பற்றி பேசாதீர்கள் என்று சொன்னதற்கு காரணம் எதையுமே முழுசா தெரிந்து கொள்ளாமல் பேசாதீர்கள் என்ற விதத்தில் தான் சொன்னேன். யாரையும் தாக்க வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. இந்த விவகாரத்தில் மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகிறார்கள். ஒருவேளை மாணவிகள் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால் நான் அவர்களின் பக்கம் நிற்பேன் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

பிறர் தொடுவது பிரச்சனை இல்லை : அபிராமி கொடுத்த விளக்கத்தை அடுத்து சர்ச்சை சற்று குறைந்து வந்த நிலையில்,நடிகை குட்டி பத்மினி தனது யூடியூப் பக்கத்தில் அபிராமியை படுமோசமாக விமர்சித்து இருந்தார். இதில் அபிராமி என்ன தெரியும்னு நீ பேசுற, நீ நடிகை சினிமாவில் நடிக்கிறீர்கள், உங்களுக்கு பிறர் தொடும்போது எந்தவிதமான பீல் இருக்காது. ஏன் என்றால் நீங்கள் நடிகை உங்களுக்கு பிறர் தொடுவதில் பிரச்சனை இல்லை.

Kalakshetra issue Bigg Boss Abhirami replied to kutti padmini

பத்திக்கிட்டு வருது : ஆனால், போராடிய பெண்கள் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், நாளைக்கு ஒரு குடும்பத்தை வழிநடத்துபவர்கள். அவர்களின் மனவேதனையை இப்படி சாதாரணமா சொல்லிட்டீங்க. ஒரு பெண்ணுக்கு குட் டச் எது, பேட் டச் எது என்று நன்றாக தெரியும். எல்லாமே தெரிந்த மாதிரி நீ பேசுனதை கேட்கும் போது எனக்கு பத்திக்கிட்டு வருது என்று மிகவும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

நல்ல குடும்பத்தில் பிறந்த எனக்கு : குட்டிபத்மினியின் மோசமான பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள அபிராமி, சினிமா துறையில் இருக்கும் பெண்கள் உங்கள மாதிரி கிடையாது குட்டி பத்மினி ஆன்ட்டி. உங்களுக்கு எந்த ஃபீலும் இல்லாதது வருத்தம் தான். உங்களுக்கே பத்திகிட்டு வருதுனா நல்ல குடும்பத்தில் பிறந்த எங்களுக்கு எவ்வளவு எரியும் ஆன்ட்டி. எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம் ஆன்ட்டி நீங்க உங்க ஹெல்த்த பாத்துக்கோங்க ஆன்ட்டி என்று கிண்டலுடன் அபிராமி பதில் கொடுத்துள்ளார். இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டு பிரச்சனையை வீதிக்கு கொண்டுவந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X