கலாக்ஷேத்ரா பெயர் யார் வாயில் நுழையாது.. என்ன ஆணவமான பேச்சு அபிராமியை விளாசிய டாக்டர் ஷர்மிளா!

சென்னை : கலாக்ஷேத்ரா கல்லூரி விவகாரம் குறித்து பிக் பாஸ் அபிராமி கல்லூரிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் நிலையில் அவருக்கு டாக்டர் ஷர்மிளா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் இயங்கி வரும் கலாக்ஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மீது ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கின்றனர்.

Kalakshetra issue Dr Sharmila strongly opposes Abirami comment

மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாக்ஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் அவரை போலீசார் கைது செய்தனர்.

பிக் பாஸ் அபிராமி : கலாக்ஷேத்ரா முன்னாள் மாணவியான பிக் பாஸ் அபிராமி, உதவிப் பேராசிரியர் ஹரி பத்மனால், தனக்கும் தன் சக தோழிகளுக்கும் தாங்கள் படிக்கும் போது எந்தவித பாலியல் தொந்தரவும் ஏற்பட்டது இல்லை. கலாக்ஷேத்ரா கல்லூரி குறித்து அவதூறு பரப்பக்கூடிய வேலை தான் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பே பல விஷயங்கள் இது போன்று நடந்து இருக்கிறது. இதனால், இதை ஒருபக்கமாக பார்க்கக்கூடாது, ஆசிரியருக்கும் குடும்பம் இருக்கு.

Kalakshetra issue Dr Sharmila strongly opposes Abirami comment

குவிந்த கண்டனம் : கடந்த பத்து வருடமாக இது நடக்கிறது என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. 2010 மற்றும் 2015ல் படித்த மாணவி என்ற முறையில் தான், நான் இங்கு பேச வந்து இருக்கிறேன். கலாக்ஷேத்ரா என்ற பெயரை சரியாக சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் இந்த பிரச்சனை குறித்து பேசுகிறார்கள் என்று பேசியிருந்தார். அபிராமியின் பேச்சுக்கு பாடகி சின்மயி, சனம் ஷெட்டி என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Kalakshetra issue Dr Sharmila strongly opposes Abirami comment

டாக்டர் ஷர்மிளா : இந்நிலையில்,நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா அளித்துள்ள பேட்டியில், கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை நடைபெறுகிறது என்பதை மாணவர்கள் துணிந்து வந்து போராட்டம் நடத்திய பிறகு தான், சமூக ஆர்வலர்கள் முன் வந்து இதற்கு அழுத்தம் கொடுத்த பின் நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முன் வந்து போராட்டம் நடத்தவில்லை என்றால் இந்த விவகாரம் வெளியில் வந்தே இருக்காது.

ஏற்றுக்கொள்ள முடியவில்லை

கலாக்ஷேத்ராவில் படித்த முன்னாள் மாணவி அபிராமி, ஹரிபத்மன் அப்படிப்பட்டவர் இல்லை, இதுல ஏதோ அரசியல் நடிக்கிறது. என்னிடம் அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை என்று பேசுகிறார். ஹரிபத்மன் மீது வைக்கும் குற்றச்சாட்டை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அபிராமியிடம் தவறாக நடக்கவில்லை என்பதற்காக அவர் யாரிடமும் தவறாக நடக்கவில்லை என்று, எப்படி சொல்ல முடியும்.

யார் வாயில் நுழையாது : அது மட்டும் இல்லாமல் கலாக்ஷேத்ரா என்ற பெயர் வாயில் நுழையாதவர்கள் எல்லாம் அதை பற்றி பேசுகிறார்கள் என்று அபிராமி கூறியதற்கு என்ன பொருள், யார் வாயில் நுழையாது என்று சொல்கிறார், இது எங்களுக்கான விஷயம், இது எங்கள் சமூகத்தை சார்ந்த விஷயம், இதில் கேள்வி கேட்க நீ யாருடா என்ற சொல்லாமல் சொல்கிறார். இந்த பேச்சை நான் ஆதங்கமாக பார்க்கவில்லை ஆணவமாக பார்க்கிறேன்.

யாருக்கும் அதிகாரம் இல்லை :

மத்திய அரசின் நிதியில் தான் அந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாம் கட்டும் வரியில் தான் அந்த நிறுவனம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த பிரச்சனையை யார் வேண்டுமானாலும் முன் வந்து கேள்வி கேட்கலாம். கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

எங்களுக்கு கோபம் வரக்கூடாதா :

89 வருட பாரம்பரியம் என்று சொல்லும் அபிராமி நான்கு வருடம் அங்கு படித்துவிட்டே இவ்வளவு பேசுகிறாரே, இத்தனை வருடமாக அந்த நிறுவனம் செயல்பட நாம் வரிகட்டிக்கொண்டு இருக்கிறோம் எங்களுக்கு கோபம் வரக்கூடாதா? மக்கள் வரிப்பணத்தில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் பெண்களுக்கு இப்படி ஒரு கொடுமை நடக்கலாமா? நாம் அவர்கள் சமூதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்குத்தான் குரல் கொடுக்கிறோம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X