»   »  கலாம் பிறந்த நாள்: மீரா, ஸ்ரீகாந்த் கண் தானம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி மதுரையில் நடந்த விழாவில் நடிகை மீரா ஜாஸ்மீன், நடிகர்ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 74 பேர் கண் தானம் செய்தனர்.கலாம் பிறந்த நாளையொட்டி மதுரை அமுதசுரபி கலை மன்றம் சார்பில் கண்தான விழா நடந்தது.இதில், கலாமின் 74வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 74 பேர் கண் தானம் செய்தனர். அமுதசுரபி மன்றத் தலைவர்பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த விழாவில், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட 74 பேர் தங்களதுகண்களைத் தானம் செய்வதாக உறுதியளித்து கடிதம் கொடுத்தனர்.அந்தக் கடிதங்களை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் இளங்கோ பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில் அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் நூலின் பிரதிகள் மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்கப்பட்டன.இவற்றை ஸ்ரீகாந்த்தும், மீரா ஜாஸ்மினும் மாணவ, மாணவியருக்கு வழங்கினர்.திரைப்பட இயக்குனர் ஸ்டான்லி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.ஜெ, கருணாநதி வாழ்த்து:ஜனாதிபதி கலாமின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.காஷ்மீர் பூகம்பத்தையடுத்து கலாம் தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இன்று போல மேலும் பல பிறந்த நாட்களை நீங்கள் காண வேண்டும். உங்களதுசீரிய தலைமையில, தொலை நோக்கு பார்வையில் நாட்டின் இளைஞர்கள் முன்னேற்றம் காண வேண்டும்.நல்ல ஆரோக்கியத்துடன், பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

கலாம் பிறந்த நாள்: மீரா, ஸ்ரீகாந்த் கண் தானம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி மதுரையில் நடந்த விழாவில் நடிகை மீரா ஜாஸ்மீன், நடிகர்ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 74 பேர் கண் தானம் செய்தனர்.கலாம் பிறந்த நாளையொட்டி மதுரை அமுதசுரபி கலை மன்றம் சார்பில் கண்தான விழா நடந்தது.இதில், கலாமின் 74வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 74 பேர் கண் தானம் செய்தனர். அமுதசுரபி மன்றத் தலைவர்பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த விழாவில், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட 74 பேர் தங்களதுகண்களைத் தானம் செய்வதாக உறுதியளித்து கடிதம் கொடுத்தனர்.அந்தக் கடிதங்களை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் இளங்கோ பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில் அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் நூலின் பிரதிகள் மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்கப்பட்டன.இவற்றை ஸ்ரீகாந்த்தும், மீரா ஜாஸ்மினும் மாணவ, மாணவியருக்கு வழங்கினர்.திரைப்பட இயக்குனர் ஸ்டான்லி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.ஜெ, கருணாநதி வாழ்த்து:ஜனாதிபதி கலாமின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.காஷ்மீர் பூகம்பத்தையடுத்து கலாம் தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இன்று போல மேலும் பல பிறந்த நாட்களை நீங்கள் காண வேண்டும். உங்களதுசீரிய தலைமையில, தொலை நோக்கு பார்வையில் நாட்டின் இளைஞர்கள் முன்னேற்றம் காண வேண்டும்.நல்ல ஆரோக்கியத்துடன், பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி மதுரையில் நடந்த விழாவில் நடிகை மீரா ஜாஸ்மீன், நடிகர்ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 74 பேர் கண் தானம் செய்தனர்.

கலாம் பிறந்த நாளையொட்டி மதுரை அமுதசுரபி கலை மன்றம் சார்பில் கண்தான விழா நடந்தது.

இதில், கலாமின் 74வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 74 பேர் கண் தானம் செய்தனர். அமுதசுரபி மன்றத் தலைவர்பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த விழாவில், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட 74 பேர் தங்களதுகண்களைத் தானம் செய்வதாக உறுதியளித்து கடிதம் கொடுத்தனர்.

அந்தக் கடிதங்களை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் இளங்கோ பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் நூலின் பிரதிகள் மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்கப்பட்டன.இவற்றை ஸ்ரீகாந்த்தும், மீரா ஜாஸ்மினும் மாணவ, மாணவியருக்கு வழங்கினர்.

திரைப்பட இயக்குனர் ஸ்டான்லி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஜெ, கருணாநதி வாழ்த்து:

ஜனாதிபதி கலாமின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் பூகம்பத்தையடுத்து கலாம் தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இன்று போல மேலும் பல பிறந்த நாட்களை நீங்கள் காண வேண்டும். உங்களதுசீரிய தலைமையில, தொலை நோக்கு பார்வையில் நாட்டின் இளைஞர்கள் முன்னேற்றம் காண வேண்டும்.

நல்ல ஆரோக்கியத்துடன், பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil