Anirudh - ஒரு வழியா நடந்துடுச்சு.. ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கும் கார்.. கடமையை முடித்த கலாநிதி

சென்னை: Kalanithi Maran Gifted Car to Anirudh (அனிருத்துக்கு கார் கொடுத்த கலாநிதி மாறன்) ஜெயிலர் படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து அனிருத்தை சந்தித்து கலாநிதி மாறன் செக்கையும், போர்ஷே பரிசாக வழங்கினார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இதுவரை உலக அளவில் 600 கோடி ரூபாயை தாண்டி வசூல் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

 Kalanithi Maran congratulated Anirudh and Gifted a Car celebrating the success of Jailer

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரஜினி: குறிப்பாக ரஜினிகாந்த் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் அவர் நடிப்பில் வெளியான 2.0, தர்பார், அண்ணாத்த ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதன் காரணமாக ரஜினி கொஞ்சம் அப்செட்டில் இருந்தார். தற்போது ஜெயிலர் படம் மெகா ஹிட்டாகியிருப்பதால் ரஜினி கம்பேக் கொடுத்துவிட்டார் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கூறிவருகின்றனர். அதேபோல் நெல்சன் திலீப்குமாரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

பரிசு: ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அதேபோல்தான் கலாநிதி மாறனும். இந்தப் படம் அவருக்கு பெத்த லாபத்தை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த்துக்கு பிஎம்டபிள்யூ கார் மற்றும் ஒரு செக் நெல்சன் திலீப்குமாருக்கு போர்ஷே கார் மற்றும் ஒரு செக் என பரிசுகளை அள்ளி வழங்கினார். அதுதொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகின.

லாபத்தில் பங்கு: ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த செக்கில் ஜெயிலர் படத்தின் லாபத்திலிருந்து நூறு கோடி ரூபாய் இருந்ததாக சிலரும்; அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் தொகை அதில் இருந்ததாக சிலரும் கூறினர். அதேபோல் நெல்சன் திலீப்குமாருக்கும் அடுத்த படத்துக்கான அட்வான்ஸைத்தான் அந்த செக்கில் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அதில் எவ்வளவு உண்மை என தெரியவில்லை.

அனிருத்துக்கு எங்கே: ரஜினி, நெல்சன் திலீப்குமாருக்கு பரிசு கொடுக்கப்பட்டதை அடுத்து அனிருத்துக்கு ஏன் இன்னும் பரிசு கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது. மேலும் ஜெயிலர் படத்தின் மேக்கிங்கில் நெல்சனும், நடிப்பில் ரஜினியும் நன்றாக செய்திருந்தாலும் படத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றது அனிருத்தின் இசைதான். எனவே அவருக்கு பரிசு கொடுத்திருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்தனர்.

ராக் ஸ்டாருக்கு கார்: இந்நிலையில் அனிருத்தை நேரில் சந்தித்த கலாநிதி மாறன் அவருக்கும் ஒரு செக்கை பரிசாக கொடுத்தார். அதுமட்டுமின்றி போர்ஷே, பிஎம்டபிள்யூ கார்களை நிறுத்தி வேண்டிய காரை எடுத்துக்கொள்ள சொன்னார். அதனையடுத்து அனிருத் போர்ஷே காரை தேர்ந்தெடுக்க அவருக்கு அந்த கார் பரிசாக கொடுக்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் ஒருவழியாக அனிருத்துக்கும் செக்கையும், காரையும் கொடுத்து கலாநிதி தனது கடமையை முடித்ததாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X