விஜய்க்கு எதிராக களத்தில் குதித்த கலாநிதி மாறன்?.. பராசக்தி ஆடியோ லான்ச்சை வைத்து டார்கெட்?.. சூடு பிடிக்குதே!

சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் ஜனவரி ஒன்பதாம் தேதியும், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் பத்தாம் தேதியும் ரிலீஸாகின்றன. ரிலீஸ் போட்டி ஒருபக்கம் இருக்க இரண்டு படங்களின் இசை வெளியீட்டு விழாவை வைத்தும் போட்டி ஆரம்பித்துவிட்டதாகவும்; தொழிலதிபர் கலாநிதி மாறன் இந்தப் போட்டிக்காக களத்தில் குதித்திருப்பதாகவும் பெரும்பாலான ரசிகர்கள் கருதுகிறார்கள்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்திருக்கிறது. இப்படம்தான் அவரது கடைசி படம் என்று சொல்லப்பட்டிருப்பதால்; விஜய்யின் ரசிகர்கள் இதனை திருவிழா போல் கொண்டாடுவதற்கு தயாராகிவருகிறார்கள். சமீபத்தில் மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழாவிலேயே அதற்கான அச்சாரத்தை பார்க்க முடிந்தது. மொத்தம் 80,000க்கும் மேற்பட்டோர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

வசூல் வேட்டை நடத்துமா?: இதுவரை படத்தின் வியாபாரம் நல்லபடியாக முடிந்திருப்பதாகவே திரைத்துறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரீ பிஸ்னெஸ்ஸில் பட்டையை கிளப்பியிருக்கும் ஜனநாயகன்; கண்டிப்பாக ரிலீஸுக்கு பிறகு செய்யப்போகும் வசூலில் தரமான சம்பவத்தை செய்யும் என்று அவரது ரசிகர்கள் அதீதமாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கைக்கு இடைஞ்சலாக சிவகார்த்திகேயன் வந்திருக்கிறார்.

Kalanithi Maran Enters the Battle Jana nayagan vs Parasakthi Audio Launch War Intensifies
Photo Credit:

பராசக்தி ரிலீஸ்: முதலில் பராசக்தி படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை நான்கு நாட்களுக்கு முன்னதாகவே ஜனவரி பத்தாம் தேதி படம் ரிலீஸாகிறது. அமரன் படத்தின் மெகா வெற்றி சிவாவுக்கான மார்க்கெட்டை மேற்கொண்டு உயர்த்தியிருக்கிறது. இதன் காரணமாக ஜனநாயகன் வசூலுக்கு பராசக்தி வசூல் கண்டிப்பாக டஃப் கொடுக்கும் என்றுதான் திரைத்துறை வல்லுநர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது.

இசை வெளியீட்டு விழா: இது ஒருபக்கம் இருக்க பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி மூன்றாம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகவிருக்கிறது. இதில் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்று பரவிய தகவலை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன். இதற்கிடையே ஜனநாயகனுடன் போட்டி போடும் முடிவை சிவாதான் எடுத்தார் என்று கடந்த சில வாரங்களாக பரவிய தகவல்களையும், திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் மறுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

களத்தில் குதித்த கலாநிதி மாறன்?: இந்நிலையில் புதிய கருத்து ஒன்று ரசிகர்களிடையே எழ் ஆரம்பித்திருக்கிறது. அதாவது மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவை ஜீ நிறுவனம் Z5 ஓடிடி தளத்தில் ஜனவரி நான்காம் தேதி மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்புகிறது. அதேநாள் பராசக்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சன் டிவியில் மாலை மூன்று மணிக்கு ஒளிபரப்புகிறார்கள். இதனைப் பார்த்த ரசிகர்களோ, 'ரிலீஸில்தான் போட்டி என்று பார்த்தால்; ஆடியோ லான்ச் ஒளிபரப்பிலேயே போட்டியை ஆரம்பித்துவிட்டார்கள். டிஆர்பியில் விஜய் தொடர்பான நிகழ்ச்சியை ஓட விடத்தான் சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன் இந்த முடிவை எடுத்திருக்கிறார்' என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள். ரசிகர்களின் கருத்துப்படி பார்க்கையில் கலாநிதி மாறனும் இந்தப் போட்டியில் குதித்திருப்பதால்; ஜனநாயகன் Vs பராசக்தி போட்டி சூடு பிடித்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X