அனிருத்துக்கு கலாநிதி மாறன் பரிசாக கொடுத்த காரின் விலை என்ன தெரியுமா? விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

சென்னை: ஜெயிலர் படத்திற்கு இசையமைத்த அனிருத்துக்கு கலாநிதி மாறன் பரிசாக கொடுத்த காரின் விலையை தெரிஞ்சிக்கலாமா?

சூப்பர் ஸ்டாரின் அட்டகாசமான நடிப்பில் வெளியான ஜெயிலர் முதல் வாரம் முடிவில் 375 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது வாரத்தில் 525 கோடி வசூல் செய்தது. இப்போது நான்கு வாரங்கள் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெயிலர் படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 633 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kalanithi Maran gifts anirudh porsche luxury car worth rs 1.4 crore

வசூல் மழை: ஜெயிலர் லாபத்தால் உச்சி குளிர்ந்து போன சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் ரஜினி,நெல்சன் மற்றும் அனிருத்திற்கு சொகுசுகாரை பரிசாக கொடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்ற மாறன், BMW i7 மற்றும், BMW x7 என்ற இரண்டு கார்களில் எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள் என்று கூற, ரஜினிகாந்த் BMW X7 காரை தேர்வு செய்தார். அதன் மதிப்பு 1.24 கோடியாகும்.

Kalanithi Maran gifts anirudh porsche luxury car worth rs 1.4 crore

Porsche கார் பரிசு: ரஜினியை தொடர்ந்து இயக்குநர் நெல்சனுக்கு காசோலை வழங்கி Porsche கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். இதையடுத்து இசையமைப்பாளர் அனிருத்தை நேரில் சந்தித்த கலாநிதி மாறன், ஜெயிலர் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக அவருக்கு காசோலை வழங்கி Porsche காரை பரிசாக வழங்கினார். இந்த காரின் மார்க்கெட் விலை, ரூ 1.4 கோடி என்றும், இடத்திற்கு ஏற்றார் போல மார்க்கெட் விலை மாறும் என்றும் கூறப்படுகிறது.

காரின் சிறப்பு அம்சம்: இந்த காரின் இன்ஜின் 265 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் இன்ஜின் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும். இது அதிகபட்சமாக 259 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் எனவும் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.8 நொடிகளிலேயே எட்டி விடும் என்று கூறப்படுகிறது. இதில் கருப்பு நிற காரை இயக்குனர் நெல்சனுக்கும், நீல நிற காரை இசையமைப்பாளர் அனிருத்தும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது. இந்த தகவலை கேட்டு இணையவாசிகள் அப்படியே ஷாக் ஆனார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X