Jailer Success-ஜெயிலர் சக்சஸ்..200 கோடி ரூபாய்..BMW கார்..சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி..ரஜினி வீட்டில் பண மழைதான்

சென்னை: Kalanithi Maran Gifted BMW To Rajini (ரஜினிக்கு பிஎம்டபிள்யு கார் பரிசு) ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து ரஜினிகாந்த்துக்கு கலாநிதிமாறன் பிஎம்டபிள்யு கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார்.

தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்விகளுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைத்திருந்த படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மிர்ணா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த பத்தாம் தேதி படமானது ரிலீஸானது.

Kalanithi Maran has gifted a BMW car to Rajinikanth after the huge success of Jailer

மெகா ஹிட்: படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இதன் காரணமாக படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸ். இதுவரை படமானது உலக அளவில் 600 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. எனவே விக்ரம் படத்தின் வசூல் சாதனையை ஜெயிலர் முறியடித்திருக்கிறது. எனவே ரஜினி ரசிகர்கள் படு உற்சாகத்தில் இருக்கின்றனர்.

என்ன பரிசு?: படத்தின் வெற்றியை அடுத்து நெல்சன் திலீப்குமாருக்கு பரிசு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் நடந்த ஜெயிலர் சக்சஸ் மீட்டில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். எனவே அங்கு வைத்து ரஜினி கண்டிப்பாக நெல்சனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார் என நம்பப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக நெல்சனுக்கு அடுத்த பட வாய்ப்பை சன் பிக்சர்ஸ் பரிசாக கொடுத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

ரஜினிக்கு செக்: சூழல் இப்படி இருக்க நேற்று ரஜினிகாந்த்தை கலாநிதி மாறன் நேரில் சந்தித்தார். அப்போது ஜெயிலர் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்து பூங்கொத்தை கொடுத்தார். பூங்கொத்தை கொடுத்த கலாநிதி அடுத்ததாக ரஜினியின் கையில் ஒரு செக்கையும் கொடுத்தார். அந்தப் புகைப்படம் வெளியாகி இணையத்தில் தீ போல பரவியது. அந்த செக் எதற்காக கொடுக்கப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பினர்.

Kalanithi Maran has gifted a BMW car to Rajinikanth after the huge success of Jailer

100 கோடி ரூபாய்: இந்தச் சூழலில் ஜெயிலர் படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை தனக்கு கொடுக்க வேண்டும் என ரஜினி ஏற்கனவே கண்டிஷன் போட்டிருந்ததாகவும்; அதன்படி வந்த லாபத்தில் 100 கோடி ரூபாய்க்கான செக்கைத்தான் நேற்று கலாநிதி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து ஏற்கனவே கொடுக்கப்பட்ட சம்பளத்தையும் சேர்த்து ரஜினிக்கு ஜெயிலர் மூலம் மட்டும் 200 கோடி ரூபாய் வருமானம் என பலரும் கணித்தனர்.

கார் பரிசு: இந்நிலையில் ரஜினிகாந்த்துக்கு பிஎம்டபிள்யு கார் ஒன்றையும் கலாநிதி மாறன் பரிசாக வழங்கியிருக்கிறார். நேற்று இரவே இதனை அவர் கொடுத்துவிட்டாலும் அதுதொடர்பான வீடியோ இப்போது வெளியாகியிருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் 200 கோடி ரூபாய் ப்ளஸ் பிஎம்டபிள்யு கார் என ரஜினிகாந்த் வீட்டில் ஜெயிலர் பண மழையையும், பரிசு மழையையும் கொட்டியிருக்கிறது என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X