Kalanithi Maran Met Rajini-ஜெயிலர் சக்சஸ்.. ரஜினிக்கு செக் கொடுத்த கலாநிதி மாறன்..லாபத்தில் பங்கு போயிடுச்சோ

சென்னை:Kalanithi Maran Met Rajini (ரஜினியை சந்தித்த கலாநிதி மாறன்) ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த்தை சந்தித்த கலாநிதி மாறன் அவருக்கு செக் ஒன்றை கொடுத்த புகைப்படம் ட்ரெண்டாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர். 2.0, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதன் காரணமாக கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் ரஜினி. அதேபோல் நெல்சன் திலீப்குமாரும் பீஸ்ட் படத்தின் தோல்வியால் ஜெயிலர் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருந்தார்.

Kalanithi Maran met Rajinikanth and handed over a cheque celebrating the success of Jailer

கம்பேக் கொடுத்த இருவர்: இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு வெளியானது ஜெயிலர் படம். நெல்சன் திலீப்குமாரின் டார்க் காமெடி பக்காவாக ஒர்க் அவுட் ஆக; ரஜினிகாந்த்தின் மாஸும், க்ளாஸும் ரசிகர்களை கவர படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் ரஜினிகாந்த்தும், நெல்சன் திலீப்குமாரும் தரமான கம்பேக்கை கொடுத்துவிட்டார்கள் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறினர்.

வசூலிலும் மாஸ்: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. முதல் நாளிலேயே இந்திய அளவில் 49 கோடி ரூபாயை படம் வசூலித்ததாக கூறப்பட்டது. அதேபோல் ஒரு வாரத்தின் முடிவில் 375 கோடி ரூபாயை க்ராஸ் செய்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. தற்போது படம் 600 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரஜினியும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

நெல்சனுக்கு பரிசு: படத்தை மெகா ஹிட்டாக கொடுத்ததற்காக நெல்சன் திலீப்குமாருக்கு ரஜினிகாந்த் எந்த பரிசும் கொடுக்கவில்லை. அதேசமயம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்ன பரிசு கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. சமீபத்தில் வெளியான தகவலின்படி தன்னுடைய பேனரில் அடுத்த படத்தை இயக்க நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் வாய்ப்பு கொடுத்திருப்பதாகவும்; அதற்காக ஜெயிலரில் வாங்கிய சம்பளத்தைவிட இரண்டு மடங்கு அதிகம் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிக்கு செக்: இந்நிலையில் கலாநிதி மாறன் ஜெயிலர் சக்சஸுக்கு பிறகு ரஜினிகாந்த்தை இன்று நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த்துக்கு அவர் செக் ஒன்றை கொடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

லாபத்தில் பங்கு?: இதற்கிடையே ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு 80 கோடி ரூபாய்தான் சம்பளம் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி படம் ஆரம்பிக்கும் முன்னரே ஜெயிலர் சம்பாதிக்கும் லாபத்தில் குறிப்பிட்ட அளவு தனக்கு வர வேண்டும் என ரஜினி கண்டிஷன் போட்டதாகவும் அதற்கு சன் பிக்சர்ஸ் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்தச் சூழலில் கலாநிதி மாறன் ரஜினிக்கு செக் கொடுத்திருப்பதால் ஒருவேளை லாபத்தின் பங்கை ரஜினிக்கு கொடுத்துவிட்டாரா இல்லை அடுத்த படத்துக்கான அட்வான்ஸை கொடுத்திருக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X