ராயன் படத்தின் முதல் விமர்சனம்.. படத்தை பார்த்த கலாநிதி மாறன் சொன்னது இதுதானாம்.. தனுஷ் ஹேப்பி
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக போட்டிக்கு களமிறங்கிய அயலானைவிட கேப்டன் மில்லர் வசூலில் கொஞ்சம் டல்லடித்ததாகவே கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க தனுஷ் இப்போது ராயன் படத்தை இயக்கி நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் அந்தப் படமானது ஜூலை 26ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் கலாநிதி மாறன் படத்தை பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. எனவே கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் தனுஷ்; தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கிறார். படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

நட்சத்திர கூட்டம்: இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா, துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் என ஏகப்பட்ட பேர் களமிறங்கியிருக்கிறார்கள். பெரும் ஸ்டார் காஸ்ட் என்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது. இந்த மாதம் 26ஆம் தேதி படமானது திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
நிறைய வன்முறை காட்சிகள்: படத்தை சென்சார் குழுவினர் பார்த்து ஏ சர்ட்டிஃபிக்கேட் கொடுத்திருக்கிறார். சென்சார் வட்டாரத்திலிருந்து வந்த தகவல்படி படம் நன்றாக இருக்கிறது. அதேசமயம் நிறைய வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. படமானது வடசென்னை பேக் ட்ராப்பில் உருவாகியிருக்கிறது. ஏற்கனவே அந்த பேக் ட்ராப்பில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, வடசென்னை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் தனுஷ்: அதேபோல் தனுஷ் முதலில் இயக்கிய பவர்பாண்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே ராயன் படத்திலும் இயக்குநராக தனுஷ் தனது முத்திரையை பதிப்பார் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். தன் குடும்பத்தை அழித்தவர்களை டானாக மாறி தனுஷ் பழி வாங்குவதுதான் படத்தின் ஒன் லைன் என்று சொல்லப்படுகிறது. லைன் சாதாரணமாக இருந்தாலும் தனுஷ் எந்த மாதிரியான திரைக்கதையை அமைத்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
படம் பார்த்த கலாநிதி மாறன்: இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ராயன் படத்தை சமீபத்தில் பார்த்ததாகவும்; படத்தை பார்த்துவிட்டு படத்தில் எல்லா காட்சிகளும் அருமையாக இருக்கின்றன. ஒரு காட்சியைக்கூட கட் செய்ய வேண்டாம் என்று கூறி தனுஷை வெகுவாக பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனுஷும் செம ஹேப்பியாக இருக்கிறார் என்று ஒரு தகவல் ஓடுகிறது.
பதிலடி தந்த தனுஷ்: முன்னதாக கடந்த சில மாதங்களாகவே தனுஷை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் உருவாகின. அதற்கெல்லாம் அமைதியாக இருந்த அவர் ராயன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைத்துக்கும் சேர்த்து பதிலடி கொடுத்தார். மேலும் போயஸ் கார்டனில் வீடு கட்டியது தொடர்பாகவும் விளக்கம் கொடுத்திருந்தது கவனிக்கத்தக்கது. அவர் அடுத்ததாக குபேரா படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை சேகர் கம்முல்லா இயக்கிவருகிறார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











