சினிமாவில் ரஜினிக்குப் பிறகு விஜய் தான்! உறுதியாகச் சொன்ன கலாநிதிமாறன்!
ரஜினிக்கு அடுத்து விஜய்தான் என கலாநிதிமாறன் தெரிவித்துள்ளார்
சென்னை: சாதாரணமாக இருப்பதில் ரஜினிக்கு பிறகு விஜய்தான் என கலாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
சர்கார் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இது ரசிகர்களின் சர்கார் என்பதை நிரூபிக்கும் விதமாக டிஜிட்டல் முறையில் ரசிகர்களுடன் சேர்ந்து ஆடியோ வெளியிடப்பட்டது.
அப்போது பேசிய சன் பிச்சர்ஸ் நிறுவனர் கலாநிதிமாறன் சிம்டாங்காரன் பாடல் குறித்த சுவாராஸ்யமான விஷயத்தை பகிர்ந்தார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரின் சியிஓ பாடல் தயாராகிவிட்டது என சொன்னதும், பாடலைக் கேட்டுவிட்டு வரிகள் புரியவில்லை என்றாராம்,. அதற்கு சியிஓ, அது டம்மி லிரிக்ஸ் என்று சொல்லியிருக்கிறார்.
பிறகு கடந்த வாரம் அதேபாடலை ப்ளே செய்து காட்டியதும், அப்படியே இருந்ததால் லிரிக்ஸ் வேண்டும் என கேட்டு படித்து பார்த்ததாகவும் சிறப்பாக விவேக் எழுதியுள்ளதாகவும் பாராட்டினார்.
ஒருமுறை அவர் தன் மனைவியுடன் விமானத்திலிருந்து இறங்கும்போது, கலாநிதியின் மனைவி பெட்டியை எடுக்கும்போது அதே விமானத்தில் பயணித்த விஜய் பெட்டியை எடுத்து கொடுத்துள்ளார். விஜய்யின் அந்த சிம்பிளிசிட்டியைப் பார்த்து வியந்து போனதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சினிமாவில் சிம்பிளாக இருப்பவர் இரண்டுபேர். அதில் ஒருவர் ரஜினிகாந்த் மற்றொருவர் தளபதி விஜய் என அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











