‘களத்தில் சந்திப்போம்’ தைப்பூசத்தன்று ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!

சென்னை: ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் களத்தில் சந்திப்போம்.

இந்த படத்தை ராஜசேகர் இயக்கி உள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தை வரும் தைப்பூசத்தன்று வெளியிட போவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நண்பர்களாக கூட்டணி

நண்பர்களாக கூட்டணி

இந்த படத்தை ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவரும் 90வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜீவா - அருள்நிதி நண்பர்களாக நடித்துள்ளனர்.

மஞ்சிமா, ப்ரியா கூட்டணி

மஞ்சிமா, ப்ரியா கூட்டணி

இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஜீவாவுக்கு மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ப்ரியாவும் ஜோடியாக நடித்துள்ளனர். இருவருக்கும் இந்த படம் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் என தெரிகிறது.

தாமதமான ரிலீஸ்

தாமதமான ரிலீஸ்

இந்த படத்தின் முதல் பார்வை, டீசர், முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. யுவனின் இசையில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னரே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படமானது கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் ஆக தாமதமானது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதையடுத்து இன்று களத்தில் சந்திப்போம் படக்குழு படத்தை தைப்பூசத்தன்று அதாவது ஜனவரி 28ம் தேதி திரையரங்கில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டுள்ளது. திரையரங்கில் வெளியிடுவதாக எடுத்த முடிவை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

Read more about: kalathil santhippom
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X