களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்

படத்திற்கு சம்மந்தமே இல்லாத சிலர், படத்திற்கு தடை வாங்கியிருப்பதாக களவாணி 2 திரைப்படத்தின் இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Kalavani 2 Movie Banned: களவாணி 2 திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது- வீடியோ

சென்னை: களவாணி 2 திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது குறித்து அப்படத்தின் இயக்குனர் சற்குணம் விளக்கம் அளித்துள்ளார்.

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் களவாணி 2. இத்திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Kalavani 2: Director Sarkunam releases a video

களவாணி 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தான் இந்த தடை பெறப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 10ம் தேதி வரை களவாணி 2 திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Kalavani 2: Director Sarkunam releases a video

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ளார். அதில், தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Kalavani 2: Director Sarkunam releases a video

வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "வழக்கு தொடர்ந்த குமரன் என்பவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவரை எனக்கு தெரியவே தெரியாது. கஷ்டப்பட்டு, கடன் வாங்கி படம் எடுத்தால், அதை தடுக்க நிறைய பேர் கிளம்பி வருகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து திடீரென தடை வாங்குகிறார்கள்.

Kalavani 2: Director Sarkunam releases a video

எனக்கு நீதிமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. நான் மதிக்கும் நீதிமன்றம், எனக்கு நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புகிறேன்", என சற்குணம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X