அரசியலில் களவாணித்தனமே கைகொடுக்கும்: மாஸ் காட்டும் களவாணி 2 ட்ரெய்லர்
சென்னை: அரசியலில் களவாணித்தனம் இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என்கிறது விமலின் களவாணி 2 ட்ரெய்லர்.
ஏ.சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா உள்ளிட்டோர் நடித்துள்ள களவாணி 2 படத்தின் ட்ரெய்லர் தமிழ்ப் புத்தாண்டான இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லரை நடிகர் அருண் விஜய் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

புகைப்பிடித்தல்
16 வருஷம் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளாவுக்கே வெறும் 90 ஓட்டு போட்ட நாடுடா நம் நாடு என்று விமலின் குரலோடு ட்ரெய்லர் துவங்குகிறது ட்ரெய்லர். ட்ரெய்லரின் துவக்கத்திலேயே விமல் புகைப்பிடிக்கிறார். அந்த புகைப்பிடித்தல் காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கலாம்.

நல்லவன்
அரசியலில் நல்லவனுக்கு காலமே கிடையாது மாப்பிள்ளை, களவாணித்தனம் தான் கைகொடுக்கும் என்கிறார் விமல். இது தேர்தல் நேரம் என்பதால் இதற்கு கண்டனம் தெரிவித்து இலவச விளம்பரம் கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள் விமல்.

எம்.ஜி.ஆர்.
அரசியலில் எப்பொழுதுமே மூன்றெழுத்து தான் ராசி என்கிறார் ஓவியா. ஆந்திராவில் ஒரு என்.டி.ஆர்., தமிழகத்தில் ஒரு எம்.ஜி.ஆர். இனி நீ ஏ.எம்.ஆர். என்று விமலை பார்த்து கூறுகிறார் ஓவியா. அப்படி என்றால் எங்க அண்ணன் எஸ்.டி.ஆரும் மூன்றெழுத்து தானே என்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்.
சுவாரஸ்யம்
இலவச விளம்பரம் கிடைக்கத் தேவையான அனைத்து விஷயங்களும் களவாணி 2 ட்ரெய்லரில் உள்ளன. ஆனால் தவறான நேரத்தில் ட்ரெய்லர் வந்துள்ளதால் இலவச விளம்பரத்தை கனவிலும் நினைக்க முடியாது. ட்ரெய்லர் நன்றாக உள்ளது. நிச்சயம் படமும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











