களவாணி மாப்பிள்ளை: ஹீரோவுக்கு அட்வைஸ் செய்த வில்லன் நடிகர்

தினேஷுக்கு நடிகர் ஆனந்த்ராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்

சென்னை: தினேஷுக்கு நடிகர் ஆனந்த்ராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.

மறைந்த பிரபல தயாரிப்பாளர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இயக்கியிருக்கும் திரைப்படம் களவாணி மாப்பிள்ளை. இப்படதின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் ஆனந்த்ராஜ், தயாரிப்பாளர் மணிவாசகத்திற்கும் தனக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி பேசினார். தனக்கு கல்யாணம் ஆன ஐந்தாவது நாளே எங்க ஊரு பூவாத்த திரைப்படத்தில் நடிக்க கூட்டி வந்துவிட்டதாக தெரிவித்தார்.

Kalavani mappillai press meet

களவாணி மாப்பிள்ளை படப்பிடிப்பின்போது, ஒரு குடும்பம் போல மகிழ்ச்சியாக இருந்ததாக அவர் கூறினார். ஷூட்டிங் முடிந்து பேக்கப் என்று இயக்குனர் சொல்லும்போது, ஏன் முடிச்சிட்டீங்க? இன்னும் இரண்டு நாட்கள் பண்ணலாமே நல்லாதானே இருக்கு என தேவயானி கேட்டாராம். இல்ல மேடம், அவ்வளவுதான் எல்லா காட்சிகளும் படமாக்கியாச்சு. பேக்கப் என்று தேவயானிக்கு ஆனந்த்ராஜ் விளக்கம் அளித்ததாக தெரிவித்தார்.

தேவயானி பற்றிப் பேசும்போது தேவயானி குரலில் ஆனந்தராஜ் பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது. படத்தின் கதாநாயகன் தினேஷ் மிக அமைதியாக இருப்பதாகவும், அதேபோல் எப்போதும் இருங்கள். அது தான் நல்லது என்று கூறினார்.

படத்தின் கதை மிக பிடித்திருந்ததகவும், தினேஷ் ரொம்ப பிடிக்கும் எனவும் தேவயானி தெரிவித்தார். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆனந்த்ராஜுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஹீரோயின் அதித்தி பேசும்போது, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ரீரெக்கார்டிங் செய்யும் இசையமைப்பாளர் ரகுநந்தனிடம் போன் செய்து, எப்படி வந்திருக்கிறது... அடுத்த படத்திற்கு வாய்ப்பு வருமா என கேட்டு டார்ச்சர் பண்ணியதாகக் கூறினார்.

களவாணி மாப்பிள்ளை திரைப்படத்தில், தினேஷ், அதித்தி மேனன், ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X