'சொய்யாங் .. சொய்யாங்' .. கலவரம்...!
சென்னை: சத்யராஜ் ரொம்ப நாட்களாக நடித்து வரும் கலவரம் ஒரு வழியாக பொங்கலுக்குத் திரைக்கு வருகிறதாம்.
ரமேஷ் செல்வம் இயக்க, யுனிவர்சல் புரடக்ஷன் தயாரிக்க உருவாகியுள்ள படம்தான் கலவரம்.
சத்யராஜ் முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில், விசாரணை அதிகாரியாக இதில் நடித்துள்ளார்.

கதை என்னவென்றால்...
படத்தின் கதை குறித்து இயக்குநர் ரமேஷ் செல்வம் கூறுகையில், ஒரு தனி மனிதனையோ அல்லது சமுதாயத்தையோ அதன் வீழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சேர்க்கும் திட்டமிட்ட சதியே கலவரம்.

நிஜக் கலவரமாம்...
ஒரு உண்மை கலவரத்தின் சம்பவத்தை மையமாக கொண்டும், அரசியல் நெரிகளின் உண்மை ரூபங்களையும் கருவாக கொண்டு அதை சினிமாவாக மாற்று முயற்சியே இத்திரைப்படம்.

நெருக்கமாக பயணிப்பதே....
கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையை கண்முன் நிறுத்தும் ஒரு முயற்சி இத்திரைப்படம்.இதில் உண்மைக்கு மிக நெருக்கமாக பயணிப்பதே இந்த படத்தின் திரைக்கதையின் சிறப்பு.

வெளிச்சமிட்டுக் காட்டுவதே...
ஒரு கலவரத்தின் ஆரம்ப நிலை முதல், பின் அச்சம்பவ களத்தின் உண்மை முகங்களை வெளிச்சமிட்டு காட்டுவத்தே இக் கலவரம்.

சொய்யாங் சொய்யாங்...
இந்த படத்தில் கானாபாலா ஒரு பாடல் எழுதி, பாடி, நடித்துள்ள சொய்யாங் சொய்யாங் என்ற பாடல் காட்சி பக்கா கமர்ஷியலாக இருக்கும் என்றார் இயக்குநர்.
படம் பொங்கல் திருநாளில் வெளியாகிறதாம்.

சுஜிபாலா
படத்தில் சுஜிபாலா நடித்துள்ளார். ஒரு பாட்டுக்கு கவர்ச்சிகரமாக ஆடியுள்ளாராம்.

புதுப் பொலிவில் இன்பநிலா
தங்கர்பச்சான் மூலம் கிராமத்துப் பெண்ணாக அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ள இன்பநிலா இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்புடன், கவர்ச்சிகரமாகவும் வளைய வருகிறாராம்.

லாவண்யா
அதேபோல இன்னொரு நாயகியாக லாவண்யாவும் இருக்கிறார். இவருக்கும் கவர்ச்சிகரமான ரோல்தானாம்.


Click it and Unblock the Notifications











