கயல் சந்திரன் நடிக்கும் 'டாவு' படம் தொடங்கியது!

By Vignesh Selvaraj

சென்னை : 'லொல்லுசபா' நிகழ்ச்சியை இயக்கிய ராம்பாலா சந்தானத்தை வைத்து 'தில்லுக்கு துட்டு' படத்தை இயக்கினார். அடுத்து அவர் இயக்கும் படம் 'டாவு'. டூ முவீ பப்ஸ் சார்பில் பி.எஸ்.ரகுநாதன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

கயல் சந்திரனுடன், முனீஸ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. ஏ.ஆர் ரஹ்மான் இசைக்குழுவைச் சேர்ந்த சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். தீபக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Kalayl chandran's Daawu movie started

'தில்லுக்கு துட்டு' படத்தைப் போல இதுவும் முழுநீள காமெடி படம். காதல், சென்டிமென்ட் ஆகியவையும் கலந்திருக்குமாம். சந்திரன் அறிமுமான 'கயல்' படமும், அடுத்து நடித்த 'ரூபாய்' படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

தற்போது 'கிரகணம்', 'திட்டம்போட்டு திருடுற கூட்டம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது 'டாவு' படத்திலும் நடிக்க இருக்கிறார். வெற்றிக்காக ஏங்கும் சந்திரனுக்கு இந்தப் படங்கள் மூலம் வெற்றி கிடைக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X