சார்பட்டா பரம்பரை படத்தின் டப்பிங் பணிகளை முடித்த காளி வெங்கட்
சென்னை: திரைப்படம் வாயிலாக அரசியல் பேசுவதில் மிகவும் கைதேர்ந்தவர் இயக்குனர் பா. ரஞ்சித்.
Recommended Video
படம் இயக்குவது மட்டுமன்றி தனது நீலம் ப்ரோடுக்ஷன் சார்பாக தரமான படங்களை தயாரித்து வருகிறார்.
பா. ரஞ்சித்தின் அடுத்த படமான சார்பட்டா பரம்பரை படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

குத்துச்சண்டை வீரர்
சார்பட்டா பரம்பரை படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார் ஆர்யா. இதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து
8 பேக் உடற்கட்டு வைத்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். 90 களில் நடந்த பாக்ஸிங்கை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு பரம்பரை
வடசென்னை பகுதியில் பிரபலமாக இருந்த ஆங்கிலக் குத்துச்சண்டைதான் சார்பட்டா பரம்பரை படத்தின் கதைக்களம். சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு பரம்பரைக்கும் இடையேயான குத்துச்சண்டையை மையமாக வைத்து படத்தின் திரைக்கதை நகரும் என தெரிகிறது.

வரவேற்பு பெற்றது
சார்பட்டா பரம்பரை இதுவரை இரண்டு அப்டேட்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டது. படத்தின் முதல் பார்வை நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. திரையுலக பிரபலங்களும் வரவேற்பை கொடுத்தனர்.

ட்வீட் பதிவிட்டார்
இதையடுத்து தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் காளி வெங்கட் படத்தில் தனது டப்பிங் பணிகளை முடித்ததாக கூறி ட்வீட் பதிவிட்டுள்ளார். ஆழமான ,தரமான,நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி எனவும் இயக்குனர் ரஞ்சித்துக்கு நன்றியும் கூறியுள்ளார் காளி வெங்கட்.


Click it and Unblock the Notifications











