தீவிர ரஜினி ரசிகராக நடிக்கும் பிரபல வாரிசு நடிகர்.. யாரு.. என்ன மேட்டருன்னு பாருங்க!
சென்னை: பிரபல வாரிசு நடிகர், ரஜினியின் தீவிர ரசிகராக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார் காளிதாஸ் ஜெயராம்.

ரஜினி படம்
அவர் தமிழில் நடித்த புத்தம் புது காலை, பாவ கதைகள், ஒரு பக்க கதை ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது மலையாளத்தில் ஜாக் அன்ட் ஜில் என்ற படத்திலும் ரஜினி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் ரஜினி
இதில் ரஜினி படம் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் உருவாகிறது. இந்தப் படத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக நடிக்கிறாராம் காளிதாஸ் ஜெயராம். இப்படத்திற்கு மலையாளத்தில் மட்டும் ரஜினி என பெயரிடப்பட்டுள்ளது.

ரஜினி ரசிகன்?
தமிழில் ரஜினி என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருவதால் தமிழில் படத்தின் பெயர் மாற்றப்படும் என தெரிகிறது. மேலும் ரஜினி ரசிகன் என்று பெயர் வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நமீதா பிரமோத்
இந்தப் படத்தை மலையாள இயக்குநர் வினில் வர்கீஸ் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நமீதா பிரமோத் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











