குடும்பத்துடன் ஹனிமூனுக்கு சென்ற காளிதாஸ் ஜெயராம்.. கொட்டும் பனியில் மனைவியுடன் செம ரொமான்ஸ்!
சென்னை: நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலி தாரினியை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தற்போது குடும்பத்துடன் ஃபின்லாந்துக்கு ஹனிமூன் டூர் சென்றுள்ளார். பொதுவாக பிரபலங்கள் தனியாகத்தான் ஹனிமூனுக்குச் செல்வார்கள். அதிகபட்சம் ஹனிமூன் போட்டோகிராஃபர்களை சமீப காலமாக அழைத்துச் செல்கின்றனர். ஆனால், அழகான அன்பான குடும்பத்தைக் கொண்டுள்ள காளிதாஸ் ஜெயராம் குடும்பத்துடன் சென்ற நிலையில், பனி சூழ்ந்த இடத்தில் இருந்து வெளியிட்ட புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
கடந்த டிசம்பர் 8ம் தேதி குருவாயூர் கோயிலில் நடிகர் காளிதாஸ் ஜெயராமுக்கு அவரது காதலியும் மாடல் அழகியுமான தாரினியுடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கோட் சூட் அணிந்துக் கொண்டு காளிதாஸ் ஜெயராம் கலக்கினார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் காளிதாஸ் ஜெயராம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் ஜெயராம் சமீபத்தில் தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்த நிலையில், அடுத்ததாக தனது மகன் திருமணத்தையும் முடித்து வைத்துள்ளார்.
குடும்பத்துடன் ஹனிமூன்: ஃபின்லாந்து நாட்டுக்கு ஜெயராம் அவரது மனைவி பார்வதி மற்றும் மகள் மாளவிகா ஜெயராம் அவருடைய கணவர் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரினி காளிங்கராயர் என 3 ஜோடிகள் ஒன்றாக குடும்பமாக ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். டிசம்பர் மாத பனி மழையை ரசிக்க சரியான இடம் ஃபின்லாந்து தான் என ரசிகர்கள் அவர்களது புகைப்படத்தை பார்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர். ஹனிமூனுக்கும் குடும்பத்துடன் சென்றுள்ளாரே காளிதாஸ் ஜெயராம் அவருடைய மனசே மனசு தான் என்றும் சூப்பர் குடும்பம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

காளிதாஸ் ஜெயராம் பிறந்தநாள்: 1993ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பிறந்த காளிதாஸ் ஜெயராம் நேற்று தனது பிறந்தநாளையும் கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை முன்னிட்டு கணவருடன் தனியாக கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தாரினி ஹேப்பி பர்த்டே கண்ணம்மா என வாழ்த்து தெரிவித்துள்ளார். பொதுவாக பெண்களைத்தான் ஆண்கள் கண்ணம்மா என கொஞ்சுவார்கள். இங்கே இதுவே வித்தியாசமாகவும் க்யூட்டாகவும் இருக்கே என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். தனது மனைவியின் வாழ்த்துக்கு கீழே தேங்க் யூ பொண்டாட்டி என காளிதாஸ் ஜெயராமும் காதலுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து: இதே போல எப்போதுமே காதலுடன் இருவரும் ஒன்றாகவும் குடும்பத்துடன் கூட்டாகவும் இருங்க என ரசிகர்கள் ஃபின்லாந்து பனி மழையை தாண்டி வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். சமீப காலமாக ஆரம்பத்தில் இருக்கும் காதல் பிரபலங்கள் மத்தியில் சில நாட்களில் குறைந்து வருவதால் இப்படி பதிவிட்டுள்ளனர். ஆனால்,ஜெயராம் 32 ஆண்டுகளாக தனது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், காளிதாஸ் ஜெயராமும் அந்த காதலை அப்பாவை போல கடைசி வரை கடைபிடிப்பார் என்கின்றனர்.

இந்த ஆண்டு 3 படங்கள்: சிறு வயதிலேயே மலையாளத்தில் அப்பா நடிப்பில் வெளியான சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த காளிதாஸ் ஜெயராம் மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த ஆண்டு அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து போர் படத்திலும், கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் தனுஷின் ராயன் உள்ளிட்ட 3 படங்களில் நடித்துள்ளார் காளிதாஸ் ஜெயராம். அடுத்த ஆண்டும் இவர் நடிப்பில் சில படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











