Indian 2 Shoothing - இந்தியன் 2 ஷூட்டிங்கில் விக்ரம் பட நடிகர்.. யார் தெரியுமா?

சென்னை: Indian 2 Shooting (இந்தியன் 2 ஷூட்டிங்) ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக காளிதாஸ் ஜெயராம் தைவான் சென்றிருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். சுதந்திர போராட்டத்தையும், லஞ்சத்திற்கு எதிரான போராட்டத்தையும் மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தியன் மெகா ப்ளாக் ப்ஸ்டர் ஆனது. இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக திட்டமிடப்பட்டது.

ஷங்கரின் இந்தியன் 2

ஷங்கரின் இந்தியன் 2

அதன்படி இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இறங்கியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கடந்த 2019ஆம் ஆண்டு ஷூட்டிங்கும் தொடங்கிய சூழலில் சில பிரச்னைகளின் காரணமாக ஷூட்டிங் தடைப்பட்டது. அதன் பின் மீண்டும் 2020ஆம் ஆண்டு முழுவீச்சில் ஷுட்டிங் தொடங்கியது.

இந்தியன் 2வில் விபத்து; ஷூட்டிங் நிறுத்தம்

இந்தியன் 2வில் விபத்து; ஷூட்டிங் நிறுத்தம்

2020ஆம் ஆண்டு தொடங்கி பரபரப்பாக நடந்துவந்த ஷூட்டிங்கில் கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சூழலில் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியன் 2 கிடப்பில் போடப்பட்டது.

களத்தில் குதித்த ரெட் ஜெயண்ட்

களத்தில் குதித்த ரெட் ஜெயண்ட்

இதனால் இந்தியன் 2 படம் பெரும்பாலும் கைவிடப்பட்டுவிட்டது என்றே பலராலும் கருதப்பட்டது. கமல் ஹாசனும் விக்ரம் படத்தில் நடித்து மெகா ஹிட்டை கொடுத்துவிட்டார். இதனால் இந்தியன் 2 நிச்சயம் மீண்டும் தொடங்கப்படாது என்பது பலரின் பேச்சாக இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்தியன் 2 படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனமும் லைகாவுடன் இணைந்து தயாரிக்க முன் வந்தது.

டேக் ஆஃப் ஆன இந்தியன் 2

டேக் ஆஃப் ஆன இந்தியன் 2

இதனையடுத்து இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. அதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின. மேலும் இந்தியன் 2 ஸ்டண்ட் கலைஞர்களுடன் கமல் ஹாசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.

தைவான்

தைவான்

இந்தியன் 2 படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காக ஷூட்டிங் பணிகளை வேகப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இந்தியன் 2 ஷூட்டிங் இப்போது தைவானில் நடந்துவருகிறது. இதற்காக கமல் ஹாசன், ஷங்கர் உள்ளிட்டோர் தைவான் சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் கமல் ஹாசனுக்கு மகனாக நடித்த காளிதாஸ் ஜெயராம் இந்தியன் 2 ஷூட்டிங்கில் இணைந்திருக்கிறார். தைவானிலிருந்து ஷங்கருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X