விக்ரம் படத்தில் ஆன்போர்டு.. கமலுடன் கைக்கட்டி பவ்யமாய் நிற்கும் வாரிசு நடிகர்.. வைரலாகும் போட்டோ!

சென்னை: கமலின் விக்ரம் படத்தில் வாரிசு நடிகர் ஒருவர் இணைந்துள்ள தகவல் அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் விக்ரம்.

இதன் மூலம் கமல்ஹாசனை முதல் முறையாக இயக்குகிறார் நடிகர் லோகேஷ் கனகராஜ். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

டைட்டில் டீசர் - வரவேற்பு

டைட்டில் டீசர் - வரவேற்பு

கமலின் 232வது படமான இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. அப்போது வெளியான டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில்

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில்

இந்நிலையில் கடந்த வாரம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதன் மூலம் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் கமலுடன் நடிப்பது உறுதியானது.

மேலும் படத்தில் அந்தோணி வர்கீஸ், நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பார்வையற்றவராக நடிக்கும் கமல்

பார்வையற்றவராக நடிக்கும் கமல்

விக்ரம் படத்தில் கமலின் கதாப்பாத்திரம் குறித்த தகவலும் வெளியானது. அதாவது நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் பார்வையற்றவராக நடிப்பதாக கூறப்படுகிறது. பாதி படம் வரை பார்வையுடனும் பாதி படத்திற்கு மேல் பார்வையற்றவராகவும் நடிக்கிறார் என தகவல் வெளியானது.

படப்பிடிப்பு தொடக்கம்

படப்பிடிப்பு தொடக்கம்

ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் ராஜ பார்வை படத்தில் பார்வையற்றவராக நடித்துள்ளார். கடந்த 16ஆம் தேதி படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் எடுத்த போட்டோக்கள் வெளியாகி லைக்ஸை குவித்து வந்தது.

கமலுடன் காளிதாஸ் ஜெயராம்

கமலுடன் காளிதாஸ் ஜெயராம்

இந்நிலையில் விக்ரம் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விக்ரம் படத்தில் தற்போது நடிகர் காளிதாஸ் ஜெயராமும் இணைந்திருக்கிறார்.

பவ்யமாக கைகளை கட்டி

பவ்யமாக கைகளை கட்டி

வேஷ்டி சட்டையில் கமல்ஹாசனுடன் காளிதாஸ் ஜெயராம் பவ்யமாக கைகளை கட்டியப்படி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. இப்படத்தில், கமல்ஹாசனின் மகனாக நடிக்கிறார் காளிதாஸ் ஜெயராம்.

கமலின் நெருங்கிய நண்பர்

கமலின் நெருங்கிய நண்பர்

காளிதாஸ் பிரபல மலையாள நடிகரான ஜெயராமின் மகன் ஆவார். நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான ஜெயராம், அவருடன் தெனாலி, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த நள தமயந்தி, உத்தமவில்லன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில்

பொன்னியின் செல்வன் படத்தில்

இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஜெயராம். ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார் ஜெயராம்.

பொன்மரம் படத்தில் ஹீரோவாக

பொன்மரம் படத்தில் ஹீரோவாக

காளிதாஸ் ஜெயராம் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவுக்கு அறிமுகமானார். 2018ஆம் ஆண்டு வெளியான பொன்மரம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

மீன் குழம்பும் மண் பானையும்

மீன் குழம்பும் மண் பானையும்

தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் காளிதாஸ். மேலும் புத்தம் புது காலை, பாவ கதைகள், ஒரு பக்க கதை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்தில் ஒப்பந்தம்

விக்ரம் படத்தில் ஒப்பந்தம்

இந்த படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. தற்போது ரஜினி என்ற படத்தில் நடித்து வரும் காளிதாஸ் ஜெயராம் கமல் ஹாசனின் விக்ரம் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X