Kalidas Jayaram Wedding: காளிதாஸ் ஜெயராம் ரிசப்ஷன்.. ஷேவ் பண்ணி செம ஸ்மார்ட்டா இருக்காரே மாப்பிள்ளை!

சென்னை: மலையாளம் மற்றும் தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாஸ் ஜெயராமை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். இந்த ஆண்டு வெளியான தனுஷின் ராயன் படத்தில் தனுஷுக்கு தம்பியாக நெகட்டிவ் ரோலில் மிரட்டியிருந்தார்.

மாடலிங் அழகியான தாரணி காளிங்கராயரை காதலித்து வந்த நிலையில், வரும் டிசம்பர் 7ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி சொகுசு ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

kalidas jayaram kalidas jayaram wedding jayaram

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. மாப்பிள்ளை மற்றும் மணமகளின் லுக்கை பார்த்த ரசிகர்கள் கண்ணே பட்டுவிடும் போல என திருஷ்டி சுற்றிப் போட்டு வருகின்றனர்.

மகள் திருமணத்தை முடித்த ஜெயராம்: இந்த ஆண்டு மே மாதம் தனது மகள் மாளவிகாவின் திருமணத்தை குருவாயூர் கோயிலில் நடிகர் ஜெயராம் நடத்தி முடித்தார். லண்டனை சேர்ந்த நவனீத் கிருஷ் என்பவருடன் திருமணத்தை முடித்த நிலையில், திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. காளிதாஸ் ஜெயராமுக்கும் நிச்சயதார்த்தத்தை முடித்த ஜெயராம் வரும் டிசம்பர் 7ம் தேதி திருமணத்தை நடத்தவுள்ளார் என்றும் இன்று முதல் திருமண நிகழ்ச்சிகள் 3 நாளைக்கு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காளிதாஸ் ஜெயராம் ரிசப்ஷன்: விக்ரம், ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த காளிதாஸ் ஜெயராம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சந்தன நிற பட்டு சட்டை மற்றும் பட்டு வேட்டி அணிந்துக் கொண்டு புதிய மாப்பிள்ளையாக செம மாஸாக போஸ் கொடுத்து நிற்கிறார். சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் என பலரும் இன்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

மணமகள் கொள்ளை அழகு: நீல நிற ஹாஃப் சாரி அணிந்துக் கொண்டு செம க்யூட்டாக மணமகள் தாரணி காளிங்கராயர் காளிதாஸ் ஜெயராம் அருகே நின்றுக் கொண்டு வரும் விருந்தினர்களை கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் வைத்து புன்னகையுடன் உபசரிக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. நடிகர் ஜெயராம் மற்றும் அவரது மனைவி பார்வதி இருவருமே ரொம்பவே ஹேப்பியாக உள்ளனர். அண்ணன் ராயன் தனுஷ் திருமணத்துக்கு வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அப்பா விக்ரம் (கமல்ஹாசன்) ஜெயராமுக்கும் நண்பர் என்பதால் நிச்சயம் வருவார் என எதிர்பார்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X