காலா ரஜினி கெட்டப்பில் ரசிகர்களுக்கு நன்றி கூறிய காளிதாஸ் ஜெயராம்!

மாலத்தீவு : பிரபல மலையாள நடிகரின் மகனும் இளம் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சென்ற ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் சதார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகும் ரஜினி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் காளிதாஸ் ஜெயராம் மாலத்தீவில் இருந்து காலா ரஜினி கெட்டப்பில் ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக

நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழ்நாட்டிலும் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமும் இப்பொழுது திரைப்படங்களில் நடித்து கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார். கதைக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் இப்போதிலிருந்தே தேர்ந்தெடுத்து நடித்து வரும் காளிதாஸ் ஜெயராம் இயக்குனர்களின் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உள்ளார்.

சதார்

சதார்

ஏற்கெனவே குழந்தை நட்சத்திரமாக சில மலையாளப் படங்களில் நடித்து வந்த காளிதாஸ் தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மலையாளத்திலும் பல படங்கள் நடிக்க தொடங்கி உள்ளார். சென்ற ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய பேசுபொருளாக ஆன பாவக் கதைகள் சுதா கொங்கரா இயக்கத்தில் தங்கம் பகுதியில் சதார் என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடித்து பட்டையைக் கிளப்பி இருந்த இவருக்கு பல பாராட்டுக்களும் விருதுகளும் கிடைத்தன.

லாக்டவுன் போடப்பட்டதை

லாக்டவுன் போடப்பட்டதை

தற்பொழுது ரஜினி என்ற பெயரில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் ஒருசேர உருவாகிவரும் திரைப்படத்தில் நடித்து வரும் காளிதாஸ் சமீபத்தில் சம்மர் வெக்கேஷனுக்காக மாலத்தீவு சென்றிருந்தார். தற்போது திடீரென இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதைப் பார்த்த ரசிகர்கள் அவரை நலம் விசாரிக்க தொடங்கினர்.

நாடுகளுக்கு செல்ல

நாடுகளுக்கு செல்ல

நடிகர் நடிகைகள் பலர் வெக்கேஷனுக்காக பெரும்பாலும் செல்லும் இடமாக மாலத்தீவு இருக்க இப்பொழுது கொரோனா பரவல் காரணமாக மாலத்தீவில் தங்கியிருக்கும் அனைத்து சுற்றுலா பயணிகளையும் அவர்களது நாடுகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படும் நிலையில் காளிதாஸ் பற்றி ரசிகர்கள் நலம் விசாரிக்க நம்பிக்கை தரும் வகையில் காலா ரஜினி கெட்டப்பில் கருப்பு சட்டை கருப்பு வேஷ்டியுடன் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Rajiniன் மகன் Lenin! யார் இந்த Manikandan | UNSUNG STARS | Episode 1
உங்களையெல்லாம் சந்திக்கிறேன்

உங்களையெல்லாம் சந்திக்கிறேன்

அதில் அவர் கூறியிருப்பதாவது மாலத்தீவில் தான் தங்கியிருக்கும் விடுதியில் தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள் இங்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. தன்னைப்பற்றி நலம் விசாரிக்க தொடர்பு கொள்ள முயற்சித்த அனைத்து ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி விரைவில் இந்தியா வந்து சேர்ந்தவுடன் உங்களையெல்லாம் சந்திக்கிறேன். என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X