முறியடிக்கப்பட்ட பாகுபலி சாதனை; ரிலீஸுக்கு முன்னே வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏ.டி வசூல் வேட்டை

By MohanRaj

வட அமெரிக்கா: இந்திய சினிமாவே தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கும் சினிமா பார்க்கப்படுவது கல்கி 2898 ஏ.டி தான். படம் இந்தியா மட்டும் இலலாமல் வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளை படக்குழு எப்போதோ தொடங்கிவிட்டது. படத்தின் அறிவிப்பில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அண்மையில் வெளியான படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Prabhas Kamal Haasan Nag Ashwin Amitabh Bhachchan Santhosh Narayanan Music Deepika Padukone

நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய ஸ்டார்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், நடிகர்களுக்கான சம்பளத்திற்கே அதிகப்படியான பணத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது. கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸூடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், அதிரடிக்கு பெயர்போன நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Prabhas Kamal Haasan Nag Ashwin Amitabh Bhachchan Santhosh Narayanan Music Deepika Padukone

டிரைலர்: ட்ரைலரைப் பார்க்கும்போது கடவுள் சக்திக்கும் அறிவியல் சக்திக்கும் இடையில் ஏற்படும் போரைப் போல் இருக்கின்றது. ட்ரைலரின் இறுதியில் வரும் கமல் ஹாசன் பேசும் வசனமும் அவருக்கான மேக்கப்பும் ஆச்சரியப்படவைக்கின்றது. ட்ரைலரில் வரும் வசனங்கள், பூமியில் தண்ணீர் தீர்ந்த பின்னர் பூமியை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் பூமிக்கு வந்து பாக்கும்போது அங்கிருப்பவர்களுடன் பேசிக்கொள்வதைப் போலும் அவர்களுடன் மோதிக்கொள்வதைப் போலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் லேயர் லேயராக இரண்டு மூன்று கதைகள் பின்னிப் பிணைந்து இருப்பதை உணர முடிகின்றது. ஆனால் உண்மையில் கதைக்களம் எப்படிபட்டது என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.

Prabhas Kamal Haasan Nag Ashwin Amitabh Bhachchan Santhosh Narayanan Music Deepika Padukone

விளம்பர யுத்தி: படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படம் வெளியாகவுள்ள தகவலை படத்தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் மக்கள் மத்தியில் எடுத்துக் கூற, நவீன எல்.இ.டி திரைகள் பொருத்தப்பட்ட 13 மினி லாரிகளை ஏற்பாடு செய்துள்ளது. இதனை நாடு முழுவதும் பயணப்படச் செய்து மக்கள் மத்தியில் ஒளிபரப்பி படம் ரிலீஸ் ஆவதை மக்களுக்குச் சொல்ல படக்குழு புதிய யுத்தியை கையாண்டுள்ளது.

Prabhas Kamal Haasan Nag Ashwin Amitabh Bhachchan Santhosh Narayanan Music Deepika Padukone

வட அமெரிக்கா வசூல்: படம் வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆவதால் வெளிநாடுகளில் கூடுதல் தியேட்டர்களைப் பிடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இதனை உலக சினிமா அளவிற்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள தகவலில், கல்கி 2898 ஏ.டி திரைப்படம் வட அமெரிக்காவில் மட்டும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் வியாபரம் ஆகியுள்ளது என தெரிவித்துள்ளது. அதாவது, படத்திற்கான முன்பதிவில் வசூல் செய்யப்பட்டுள்ள தொகைதான் இது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூபாய் 12.5 கோடிக்கு மேல் ஆகும். படம் ரிலீஸான பின்னர் இந்த வசூல் கணக்கு இன்னும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் இல்லாமல் வட அமெரிக்காவில் வெளியான இந்திய படங்களிலேயே கல்கி 2898 ஏ.டி படம்தான் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் அதிக வசூலைக் குவித்த படமாக மாறியுள்ளது. இது பாகுபலியின் வசூலைவிடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X