ஜஸ்ட் மிஸ்! தப்பித்த பாகுபலி 2இன் சாதனை! கல்கி 2898 ஏ.டி முதல் நாள் வசூல்.. படக்குழு அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் புரோமோஷனே செய்யவில்லை என்றாலும் முதல் நாள் முதல் காட்சிக்கு ஹவுஸ்ஃபுல் காட்சியாக திரையிடப்பட்ட படமாக மாறியது நேற்று அதாவது ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ் ஆன கல்கி 2898 ஏ.டி (Kalki 2898 A.D). நான்கு ஆண்டுகள் மிகவும் மெனக்கெட்டு உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு எங்கு திரும்பினாலும் நல்ல ரிவ்யூக்களையே பெற்று வருகின்றது. குறிப்பாக மகாபாரதக் கதையை, அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த பின்னர் பூமியே உருக்குலைந்து போன பின்னர் நடைபெறும் மாற்றங்களை தனது அசாத்திய கற்பனையால் சி.ஜி மற்றும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர் நாக் அஸ்வின்.

படம் பலவேறு பாகங்களைக் கொண்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லாத அளவிற்கு இறுதியாக முடிக்கும்போது கல்கி சினிமேட்டிக் யுனிவர்ஸ் என முடிக்கும்போதே ரசிகர்களுக்கு உற்சாகத்தை தூண்டிவிட்டது படக்குழு. படத்தில் பிரபாஸ்தான் ஹிரோ என படக்குழு சொன்னாலும், படத்தில் வரும் காட்சிகளைப் பார்க்கும்போது அமிதாப் பச்சன் தான் கதாநாயகன் என நமக்குள் ஒரு எண்ணத்தை உருவாக்கிவிடும் அளவிற்கு காட்சிகளை அட்டகாசமாக உருவாக்கியுள்ளார்.

Kalki 2898 AD Box Office Collection Prabhas

பிரபாஸ், அமிதாப் பச்சன் என இருவரும் தங்களுக்கான ஸ்கிரீன் டைமில் கலக்கினால், சொற்பமான நேரங்களே வரும் கமல் ஹாசன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகின்றார். சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் பிடித்த ரசிகர்களுக்கும் இந்த படம் விசுவல் ட்ரீட், ஒரு திருப்திகரமான படத்தை பார்க்கவேண்டும் என நினைத்து போகின்றவர்களுக்கும் இந்த படம் ஒரு தரமான படம் என்றே கூறவேண்டும். 3டி-யில் படம் பார்க்கும் ரசிகர்களில் பெரும்பாலானோர்களுக்கு இந்த படம் கட்டாயம் திருப்திகரமான படம்தான்.

Kalki 2898 AD Box Office Collection Prabhas

மிரட்டலான இசை: படத்தின் திரைக்கதையில், காட்சி வடிவமைப்புகளில், சண்டைக் காட்சிகளில் வசனங்களில் இயக்குநர் ஸ்கோர் செய்து கொண்டே போகின்றார் என்றால், நடிப்புகளில் அனைவரும் கெத்து காட்டுகின்றனர். ஆனால் இவர்களை அனைவரையும் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு சந்தோஷ் நாராயணன் இசை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஒரு சில இடங்களில் சந்தோஷ் நாராயணன் ஹம்மிங் செய்கின்றார். அந்த காட்சிகளில் அவரது குரல், அந்த காட்சிகளை தூக்கி நிறுத்துகின்றது.

Kalki 2898 AD Box Office Collection Prabhas

முதல் நாள் வசூல்: உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்திற்கு அனைத்து இடங்களில் இருந்தும் பாசிடிவ் ரெஸ்பான்ஸ்தான். இந்தியாவில் மட்டும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் 3டி காட்சிகளும் 3டி இல்லாத 2டி காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்சிகள் ஒளிபரப்பப் பட்டது. இதன்மூலம் இந்தியாவில் மட்டும் இந்த படம் கிட்டத்தட்ட ரூபாய் 115 கோடி வசூலை அள்ளி இருக்கும் என திரைப்படங்களின் பாக்ஸ் ஆஃபீஸ் குறித்த தகவலை வெளியிடும் சாக்நிக் வலைதளம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும் வெளிநாடுகளில் ரூபாய் 65 கோடி வசூலை அள்ளியிருக்கும் எனவும் தெரிவித்திருந்தது.

Kalki 2898 AD Box Office Collection Prabhas

பாக்ஸ் ஆஃபீஸில் சாதனை: இதன் அடிப்படையில் கல்கி 2898 ஏ.டி படம் தனது முதல் நாள் வசூலில் கிட்டத்தட்ட ரூபாய் 185 கோடியை அள்ளியிருக்கும் எனவும் அந்த வலைதளம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கல்கி 2898 ஏ.டி படத்தின் முதல் நாள் வசூல் என்பது உலகம் முழுவதும் சேர்த்து மொத்தம் ரூபாய் 191.5 கோடிகளை வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் நல்ல வசூலைக் குவித்திருந்தாலும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் முதல் நாளில் வசூல் செய்ததை விடவும் கிட்டத்தட்ட 26 கோடி ரூபாய் குறைவாக வசூல் செய்துள்ளது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 217 கோடிகளை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X