இந்த மாதிரி நேரத்துல பென்சில் ஹீல்ஸ் எதுக்கு? தீபிகா படுகோனுக்கு வகுப்பெடுக்கும் நெட்டிசன்கள்!

மும்பை: இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படமாக கல்கி 2898 ஏ.டி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் இன்னும் ஒரு வாரத்தில் அதாவது ஜூன் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படக்குழு படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. கடந்த 10ஆம் தேதி வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தினை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல எல்.ஈ.டி திரைகள் கொண்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். படத்தில் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பல இந்திய திரைப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தினை வைஜெயந்தி மூவீஸ் தாயாரித்துள்ளது. மேலும் படத்தினை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான பைரவா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Kalki 2898 AD Deepika Padukone

வில்லன் கமல்: படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கின்றார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. ட்ரைலரிலும் கமல்ஹாசன் ஒரு டயலாக் பேசும் விதமாக காட்டப்பட்டிருந்தது. நெற்றிக்கண்ணோடு உலகநாயகன் கமல்ஹாசன் இருப்பது, அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kalki 2898 AD Deepika Padukone

ப்ரீ ரிலீஸ்: இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நேற்று அதாவது ஜூன் 19ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. அதில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பாகுபலி படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி தொகுத்து வழங்கினார்.

Kalki 2898 AD Deepika Padukone

கர்ப்பமான இருக்கும் தீபிகா படுகோன்: நடிகை தீபிகா படுகோன் மற்றும் அவரது இணையர் ரன்வீர் சிங் தம்பதியர் தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். மேலும் வரும் செப்டம்பர் மாதம் இவர்களுக்கு குழந்தை பிறக்கவுள்ளது. இந்நிலையில் கல்கி 2898 ஏ.டி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் கலந்துகொள்ள நடிகை தீபிகா படுகோன் வந்தார். அவருடன் அவரது கணவர் ரன்வீர் சிங்கும் வந்திருந்தார். கருப்பு நிற உடையில் இருவருமே அழகாக இருந்தனர்.

Kalki 2898 AD Deepika Padukone

பென்சில் ஹீல்ஸ்: நிகழ்வுக்கு வந்த நடிகை தீபிகா படுகோன் பென்சில் ஹீல்ஸ் காலணி அணிந்திருந்தார். இதனால் இவர் மேடைக்கு மேலே வர அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் ஏறி வருவதற்கு ரொம்பவே சிரமப்பட்டார். இதனால் மேடையில் இருந்த அமிதாப் பச்சன், பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி ஆகியோர் உதவினர். குறிப்பாக அமிதாப் பச்சன் தீபிகா படுகோனிடம் சென்று அவரை கைகளைப் பிடித்து மெதுவாக மேடைக்கு அழைத்து வந்தார்.

Kalki 2898 AD Deepika Padukone

நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்: இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனால் ரசிகர்கள் ஒருசிலர், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பென்சில் ஹில்ஸ் காலணிகள் அணிவது நல்லதல்ல. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் தீபிகா ஏன் இப்படி கவனக்குறைவாக இருக்கின்றார். இது குறித்து அவரிடம் யாராவது சொல்லுங்கள்" என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Kalki 2898 AD Deepika Padukone

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X