அதிகப்பிரசங்கி ரசிகர்களுக்கு ஆப்பு வைத்த கல்கி 2898 ஏ.டி டீம்; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

சென்னை: இந்திய சினிமாவே தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கும் சினிமா எனறால் அது கல்கி 2898 ஏ.டி தான். பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல் ஹாசன் என எக்கச்சக்க திரைபிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு பான் இந்தியா படமாகவே உருவாகியுள்ளது. இதுவரை இந்திய சினிமாவில் செய்யப்படாத அளவிற்கு பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் மொத்தம் இரண்டு பாகங்களைக் கொண்டது. வில்லனாக நடித்துள்ள கமல் ஹாசன் முதல் பாகத்தில் 19 நிமிடங்களும் இரண்டாம் பாகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமும் வரவுள்ளார் என்ற தகவல் வெளியானது.

Kamal Haasan Prabhas Deepika Padukone

ட்ரைலர் ரிலீஸ்

படத்தின் ட்ரைலர் இன்று அதாவது ஜூன் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது என படத்தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இந்த படம் வரும் 27ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. அமெரிக்காவில் 26ஆம் தேதியே ரிலீசாகின்றதால் படத்திற்கான முன்பதிவு நேற்றில் இருந்தே தொடங்கிவிட்டது. இன்று ட்ரைலரை அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் யூட்யூப் சேனலிலும் ட்ரைலெர் வெளியாகும் என கூறப்படுகின்றது.

Kamal Haasan Prabhas Deepika Padukone

கல்கி 2898 ஏ.டி டீம் நோட்டீஸ்

ட்ரைலர் எத்தனை மணிக்கு ரிலீசாகும் என்ற தகவலை வைஜெயந்தி மூவீஸ் சொல்லவில்லை என்றாலும் சரியாக ஆறு மணிக்கு ட்ரைலர் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவிப்பினை பின் (Pin) செய்துள்ளது. அதாவது முதன்மை பதிவாக குறிப்பிட்டுள்ளது. அதில் கல்கி 2898 ஏ.டி படத்தின் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள், இசை உள்ளிட்டவை அனைத்துமே வைஜெயந்தி மூவீஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. ரசிகர்கள் / பொதுமக்கள் இதனை பகிர்வது காப்புரிமைச் சட்டம் 1957இன்படி சட்டவிரோதமானது. இதனைப் பகிர்பவர்கள் மீது சைபர் க்ரைம் போலீசார் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

Kamal Haasan Prabhas Deepika Padukone

படக்குழுவுக்கு நஷ்டம்

தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் ரசிகர்களில் வெகு சிலர் அந்த படத்தை முழுவதுமாக தங்களது மொபைலில் படம் பிடித்து அதனை இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றிவிடுகின்றனர். இதனால் இணையவாசிகள் பலர் படத்தினை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்து விடுகின்றனர். மேலும் தியேட்டருக்கு படம் பார்க்க வருவதில்லை. இதன் காரணமாகவே பலர் தியேட்டருக்கு படம் பார்க்க வருவதில்லை. இதனால் படக்குழுவினருக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றது.

Kamal Haasan Prabhas Deepika Padukone

அதிகப்பிரசங்கி ரசிகர்களுக்கு ஆப்பு

இதுமட்டும் இல்லாமல், படத்தின் மிகவும் முக்கியமான காட்சியை, சுவாரஸ்யமூட்டும் காட்சியை தங்களது மொபைலில் படம் பிடித்து தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்கின்றனர். இது படம் பார்க்க வரும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதுடன் படத்தின் விமர்சனத்தையும் பாதிப்படையச் செய்கின்றது. இதனால் வசூலும் பாதிக்கின்றது. இவ்வாறான விஷயங்களைக் கருத்தில் கொண்டுதான் கல்கி 2898 ஏ.டி படத்தயாரிப்பு நிறுவனம் காப்புரிமை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. எனவே படம் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் இதனை கருத்தில் கொண்டு செயல்படவும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X