7 மணிக்கு சம்பவம் இருக்கு.. உச்சகட்ட எதிர்பார்ப்பு.. இந்தியாவை அலறவிட கல்கி 2898 ஏ.டி டிரைலர் தயார்!

சென்னை: இந்திய சினிமாவே தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கும் சினிமா எனறால் அது கல்கி 2898 ஏ.டி தான். பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க கமல் ஹாசன் வில்லனாக நடித்துள்ள இந்த படம் ஒரு பான் இந்தியா படமாகவே உருவாகியுள்ளது. இதுவரை இந்திய சினிமாவில் செய்யப்படாத அளவிற்கு பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் மொத்தம் இரண்டு பாகங்களைக் கொண்டது. வில்லனாக நடித்துள்ள கமல் ஹாசன் முதல் பாகத்தில் 19 நிமிடங்களும் இரண்டாம் பாகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமும் வரவுள்ளார் என்ற தகவல் வெளியானது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய ஸ்டார்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், நடிகர்களுக்கான சம்பளத்திற்கே அதிகப்படியான பொருட்செலவை தயாரிப்பு நிறுவனம் செய்துள்ளது. கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸூடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், அதிரடிக்கு பெயர்போன நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Kalki 2898 A D Trailer Kalki 2898 A D Kamal Haasan Prabhas Deepika Padukone Kalki 2898 A D Movie 2898 2898

மிரட்டிவிடும் தீபிகாவின் போஸ்டர்: சில தினங்களுக்கு முன்னர் அமிதாப் பச்சனின் மிரட்டலான புகைப்படத்தை வெளியிட்ட படக்குழுவுக்கு இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வந்தது. இந்நிலையில் நேற்று அதாவது, ஜூன் 9ஆம் தேதி தீபிகா படுகோனின் புகைப்படத்தை வெளியிட்டது. அந்த போஸ்டரில் தீபிகா படுகோன் போர் வீராங்கனையைப் போலவும் ஏதோ ஒரு பெரும் ஏக்கத்தில் இருந்து வெளிவந்ததைப் போன்ற முக பாவத்துடனும் காணப்படுகின்றார். இந்த போஸ்டர் இணையத்தில் வேகமாக பரவியது.

ரசிகர்களை எச்சரித்த படக்குழு: வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவிப்பினை பின் (Pin) செய்துள்ளது. அதாவது முதன்மை பதிவாக குறிப்பிட்டுள்ளது. அதில் கல்கி 2898 ஏ.டி படத்தின் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள், இசை உள்ளிட்டவை அனைத்துமே வைஜெயந்தி மூவீஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. ரசிகர்கள் / பொதுமக்கள் இதனை பகிர்வது காப்புரிமைச் சட்டம் 1957இன்படி சட்டவிரோதமானது. இதனைப் பகிர்பவர்கள் மீது சைபர் க்ரைம் போலீசார் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

Kalki 2898 A D Trailer Kalki 2898 A D Kamal Haasan Prabhas Deepika Padukone Kalki 2898 A D Movie 2898 2898

ட்ரைலர் ரிலீஸ்: படத்தின் ட்ரைலர் 10ஆம் தேதி அதாவது இன்று ரிலீசாகவுள்ளது என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதுமட்டும் இல்லாமல், ட்ரைலரை இந்தியா முழுவதும் உள்ள ஸ்மார்ட் சிட்டிகளில் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவும் படக்குழு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதேபோல், படம் வரும் 27ஆம் தேதி ரிலீசாகவுள்ளது என தெரிவித்திருந்தது.

வில்லன் கமல்: கல்கி 2898 ஏ.டி திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தில் கமல்ஹாசன் 19 நிமிடங்களும் இரண்டாம் பாகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமும் வரவுள்ள தகவல் அண்மையில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக உலா வந்தது. இந்தகவல் கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது மட்டும் இல்லாமல், இந்தியன் 2 படம் ஜூலை மாதம் 12ஆம் தேதி ரிலீசாகவுள்ள தகவலும் கமல் ரசிகர்களை கொண்டாட்ட மழையில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X