நெற்றிக்கண்ணோடு வந்த உலக நாயகன்; வில்லன் கெட்டப்பில் மிரட்டல்; வெளியானது கல்கி 2898 ஏ.டி ட்ரைலர்!

சென்னை: இந்திய சினிமாவே தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கும் சினிமா எனறால் அது கல்கி 2898 ஏ.டி தான். பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க கமல் ஹாசன் வில்லனாக நடித்துள்ள இந்த படம் ஒரு பான் இந்தியா படமாகவே உருவாகியுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. படம் குறித்த ஒவ்வொரு அப்டேட் வரவர ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகிக் கொண்டே வந்தது.

குறிப்பாக சில தினங்களுக்கு முன்னர் வெளியான அமிதாப் பச்சன் போஸ்டர் எல்லாம் இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இதற்கு காரணம் இதுவரை இப்படியான தோற்றத்தில் அவரை யாருமே பார்த்ததில்லை என்பதுதான். அதேபோல் நேற்று தீபிகா படுகோனின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தது. இதற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்தனர்.

Prabhas Kamal Haasan Nag Ashwin Santhosh Narayanan Deepika Padukone

நட்சத்திரப் பட்டாளம்: நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய ஸ்டார்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், நடிகர்களுக்கான சம்பளத்திற்கே அதிகப்படியான பணத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது. கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸூடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், அதிரடிக்கு பெயர்போன நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Prabhas Kamal Haasan Nag Ashwin Santhosh Narayanan Deepika Padukone

ரசிகர்களை எச்சரித்த படக்குழு: வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவிப்பினை பின் (Pin) செய்துள்ளது. அதாவது முதன்மை பதிவாக குறிப்பிட்டுள்ளது. அதில் கல்கி 2898 ஏ.டி படத்தின் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள், இசை உள்ளிட்டவை அனைத்துமே வைஜெயந்தி மூவீஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. ரசிகர்கள் / பொதுமக்கள் இதனை பகிர்வது காப்புரிமைச் சட்டம் 1957இன்படி சட்டவிரோதமானது. இதனைப் பகிர்பவர்கள் மீது சைபர் க்ரைம் போலீசார் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

Prabhas Kamal Haasan Nag Ashwin Santhosh Narayanan Deepika Padukone

ட்ரைலர் ரிலீஸ்: படத்தின் ட்ரைலர் 10ஆம் தேதி அதாவது இன்று ரிலீசாகவுள்ளது என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ட்ரைலர் ரிலீசாகியுள்ளது. படம் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் என பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளதால், ட்ரைலரும் பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு, வெளியிட்டுள்ளது. மொத்தம் 3.02 நிமிடங்கள் இந்த ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

Prabhas Kamal Haasan Nag Ashwin Santhosh Narayanan Deepika Padukone

எப்படி இருக்கு ட்ரைலர்: ட்ரைலரைப் பார்க்கும்போது கடவுள் சக்திக்கும் அறிவியல் சக்திக்கும் இடையில் ஏற்படும் போரைப் போல் இருக்கின்றது. ட்ரைலரின் இறுதியில் வரும் கமல் ஹாசன் பேசும் வசனமும் அவருக்கான மேக்கப்பும் ஆச்சரியப்படவைக்கின்றது. குறிப்பாக அவர் பேசும் வசனமான, " பயப்படாதே, இன்னொரு பிரபஞ்சம் வருகின்றது என்ற வசனமும் அதற்கு வைக்கப்பட்டுள்ள க்ளோசப் ஷாட்டும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைக்கின்றது. குறிப்பாக ட்ரைலரில் வரும் வசனங்கள், பூமியில் தண்ணீர் தீர்ந்த பின்னர் பூமியை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் பூமிக்கு வந்து பார்க்கும்போது அங்கிருப்பவர்களுடன் பேசிக்கொள்வதைப் போலும் அவர்களுடன் மோதிக்கொள்வதைப் போலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் லேயர் லேயராக இரண்டு மூன்று கதைகள் பின்னிப் பிணைந்து இருப்பதை உணர முடிகின்றது.

வில்லன் கமல்: கல்கி 2898 ஏ.டி திரைப்படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தில் கமல் ஹாசன் 19 நிமிடங்களும் இரண்டாம் பாகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமும் வரவுள்ள தகவல் அண்மையில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக உலா வந்தது. இந்தகவல் கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது மட்டும் இல்லாமல், இந்தியன் 2 படம் ஜூலை மாதம் 12ஆம் தேதி ரிலீசாகவுள்ள தகவலும் கமல் ரசிகர்களை கொண்டாட்ட மழையில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X