ரசிகர்களை திருப்திபடுத்த படத்தின் டூரேசனை நீட்டித்த கல்கி டீம்.. எவ்வளவு நேரம்னு தெரியுமா?

சென்னை: இந்திய சினிமாவே தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கும் சினிமாவாக பார்க்கப்படுவது கல்கி 2898 ஏ.டி தான். படத்தின் அறிவிப்பில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அண்மையில் வெளியான படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ள இந்த படம் ஒரு பான் இந்தியா படமாகவே உருவாகியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய ஸ்டார்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், நடிகர்களுக்கான சம்பளத்திற்கே அதிகப்படியான பணத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது. கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸூடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், அதிரடிக்கு பெயர்போன நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Prabhas Kamal Haasan Nag Ashwin Amitabh Bhachchan Santhosh Narayanan Music Deepika Padukone

படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் புரோமசன் நிகழ்ச்சிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மும்பையில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பிரபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த நிகழ்வை நடிகர் ராணா டகுபதி தொகுத்து வழங்கினார்.

படத்தின் நேரம்: இந்நிலையில் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கல்கி 2898 ஏ.டி படத்தின் முதல் பாகம் மொத்தம் 3 மணி நேரம் 56 நொடிகள் ஒளிபரப்பாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது கல்கி படத்தினை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

Prabhas Kamal Haasan Nag Ashwin Amitabh Bhachchan Santhosh Narayanan Music Deepika Padukone

வில்லன் கமல்: படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கின்றார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. ட்ரைலரிலும் கமல்ஹாசன் ஒரு டயலாக் பேசும் விதமாக காட்டப்பட்டிருந்தது. நெற்றிக்கண்ணோடு உலகநாயகன் கமல்ஹாசன் இருப்பது, அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் கல்கி 2898 ஏ.டி படம் வெளியாகி இரண்டு வாரங்களில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படமும் வெளியாகவுள்ளது. மேலும் கல்கி 2898 ஏ.டி படத்தின் முதல் பாகத்தில் கமல்ஹாசன் 19 நிமிடங்கள் வருகின்றார் என்றும், இரண்டாம் பாகத்தில் ஒன்றரை மணி நேரம் வருகின்றார் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

Prabhas Kamal Haasan Nag Ashwin Amitabh Bhachchan Santhosh Narayanan Music Deepika Padukone

தீபிகா படுகோன்: மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் நடிகை தீபிகா படுகோனிடம் படத்தில் நடித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் படத்தில் கர்ப்பமாக இருப்பதைப் போல் நடித்தேன். தற்போது நான் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கின்றேன். இது உண்மையிலேயே சவாலான விஷயம்தான் என கொஞ்சம் உருக்கமாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது குறுக்கிட்ட ராணா டகுபதி, தீபிகா படுகோன் இன்னும் கதாபாத்திரத்திலேயே இருக்கின்றார் எனக் கூறினார். இதைக்கேட்டதும் தீபிகா படுகோன் உட்பட அனைவரும் சிரித்தனர்.

Prabhas Kamal Haasan Nag Ashwin Amitabh Bhachchan Santhosh Narayanan Music Deepika Padukone

தொடர்ந்து பேசிய தீபிகா, மொத்தம் மூன்று வருடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் என ஆசைப்படுகின்றேன். மேலும், படத்தில் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். படத்தில் நடிக்க நடிக்கத்தான் படம் என்ன சொல்லவருகின்றது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது" என பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X