பகல் கொள்ளையா இருக்கே? கல்கி 2898 ஏ.டி படத்தின் ஒரு டிக்கெட் விலை இவ்வளவா?.. மிரண்டு போன ரசிகர்கள்!
மும்பை: உலக அளவில் ஒரு இந்திய சினிமாவுக்கு இதுவரை ஏற்படாத எதிர்பார்ப்பு ஒரு படத்திற்கு ஏற்பட்டுள்ளது என்றால் அது பிரபாஸ் நடிப்பில் நாளை அதாவது ஜூன் 27ஆம் தேதி வெளியாகவுள்ள கல்கி 2898 ஏ.டி படத்திற்குதான். இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் ராணா டகுபதி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தினை இதுவரை இந்திய சினிமாவில் செய்திடாத பொருட்செலவில் கல்கி 2898 ஏ.டி படத்தினை உருவாக்கியுள்ளது வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இந்த ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததால் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்ட சில மணி நேரங்காளிலேயே பல மில்லியன்கள் பார்வையாளர்களைக் கடந்தது. அதேபோல் கலவையான விமர்சனங்களையும் பெற்றது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான படத்தின் ரிலீஸ் ட்ரைலர் ரசிகர்களின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. வெளிநாடுகளில் மட்டும் இந்த படம் இதுவரை ரிலீஸ்க்கு முன்னதாக, வெளிநாடுகளில் மட்டும் பல கோடிகளை வசூல் செய்துள்ளது. பொதுவாகவே திரைப்பட வசூல்களைக் கணித்து செய்தி வெளியிடும் சாக்நிக் என்ற வலைதளம் கல்க் 2898 ஏ.டி படம் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் டிக்கெட்டுகள் மூலம் ஏறக்குறைய ரூபாய் 37 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

உச்சம் தொட்ட டிக்கெட் விலை: இந்நிலையில் கல்கி 2898 ஏ.டி படத்திற்கு உள்ள மிகுந்த எதிர்பார்ப்பினால் மும்பையில் படத்தின் டிக்கெட்டுகள் நேரடியாக திரையரங்குகளிலேயே எக்கச்சக்கமாக விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது தொடர்பான தகவல்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பையில் உள்ள Maison INOX: BKC இல் உள்ள ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் கல்கி 2898 ஏ.டி. படத்துக்கான டிக்கெட்டுகளை ரூ.2,300க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அட்ரியா மாலில் உள்ள INOX: இன்சிக்னியா, வோர்லி மற்றும் PVR ICON: ஃபீனிக்ஸ் பல்லேடியம், லோயர் பரேல், படத்தின் டிக்கெட்டுகள் ரூபாய் 1560இல் இருந்து ரூபாய் 1,760 வரை விற்பனை செய்யபடுகின்றது. இது இல்லாமல் வரிகளும் சேர்த்து கட்டவேண்டி வரும் என்பதால் ரசிகர்களுக்கு இந்த தகவல்கள் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தங்கம் விலைக்கு விற்பனை செய்யப்படும் டிக்கெட்: மேலும் பலர், போகின்ற போக்கைப் பார்த்தால் கல்கி 2898 ஏ.டி படத்தின் டிக்கெட் விலை தங்கத்தின் விலைக்கு நிகராக விற்பனை செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனக் கூறி வருகின்றனர். ஆந்திரவைப் பொறுத்த வரையில் டிக்கெட் விலையில் உச்ச வரம்பு இருந்தாலும், ஆந்திரப் பிரதேச அரசு சமீபத்தில் படத்தின் டிக்கெட்டுகளை உயர்த்த அனுமதித்துள்ளது.

உயர்த்தப்பட்ட டிக்கெட் விலை: அதன்படி, ஒற்றைத் திரை திரையரங்குகளுக்கு 75 ரூபாயும், மல்டிபிளக்ஸ்களுக்கு 125 ரூபாயும் டிக்கெட் விலையை உயர்த்த அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இது திரைப்படம் வெளியான தேதியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு பொருந்தும். மேலும் ஐந்து தினசரி காட்சிகளுக்கும் பொருந்தும். கல்கி 2898 ஏ.டி படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத்தின் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் செய்திகள் வெளியாகின.



Click it and Unblock the Notifications