Project K: கமல், பிரபாஸுடன் இணையும் பான் இந்தியா ஹீரோ... பாக்ஸ் ஆபிஸ்ல Project K சம்பவம் இருக்கு!

சென்னை: பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்தப் படத்துக்கு கல்கி 2898 கி.பி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ப்ராஜக்ட் கே எனப்படும் கல்கி நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.

 Kalki 2898 AD: Dulqer Salmaan has done a cameo in Prabhas, Kamal Haasan’s ProjectK Kalki Film

இந்நிலையில், இந்தப் படத்தில் துல்கர் சல்மான் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல், பிரபாஸுடன் இணையும் துல்கர் சல்மான் : பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தப் படத்துக்கு கல்கி 2898 ஏடி என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸுடன் கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பகவான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக சொல்லப்படும் கல்கி கேரக்டரில் பிரபாஸ் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக ஆதிபுருஷ் படத்தில் ராமர் கேரக்டரில் பிரபாஸ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் கல்கி படத்தில் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ கெட்டப்பில் பிரபாஸ் நடித்துள்ளதாக தெரிகிறது. அவருக்கு வில்லனாக கமல் நடித்துள்ளது திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில படங்களில் நெகட்டிவான கேரக்டரில் நடிக்காத கமல், கல்கியில் வில்லனாக நடிப்பது பெரிய ஹைப் கொடுத்துள்ளது. அதேபோல், முதல் பாகத்தை விடவும் கல்கி 2ல் தான் கமலின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. சும்மாவே நடிப்பில் மிரட்டும் உலகநாயகன் இந்தப் படத்தில் வில்லத்தனத்தில் மாஸ் காட்டுவார் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு உள்ளனர்.

கமல், பிரபாஸ் தவிர அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், பசுபதி ஆகியோரது கேரக்டரும் கல்கி படத்திற்கு பெரிய சப்போர்ட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது இவர்கள் மட்டும் போதாது என மலையாள டாப் ஹீரோ துல்கர் சல்மானையும் இப்படத்தில் நடிக்க வைத்துள்ளாராம் இயக்குநர் நாக் அஸ்வின். அதன்படி மிரட்டலான கேமியோ ரோலில் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்துள்ள துல்கர் சல்மான், அடுத்ததாக சூர்யாவின் 43வது படத்தில் கமிட்டாகியுள்ளார். அதேபோல், அட்லீயின் உதவி இயக்குநர் இயக்கும் 'கோலி' படத்தில் நடிக்கவுள்ளார். இதன் தொடர்ச்சியாக பிரபாஸ், கமலுடன் ப்ராஜெக்ட் கே படத்திலும் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இதுகுறித்த அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. கல்கி 2898 அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X