’கல்கி 2898 ஏடி’ படத்துக்கு எதிராக கிளம்பிய திருட்டு சர்ச்சை.. தென் கொரிய கலைஞர் வச்ச ஆப்பு!

சென்னை: நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’கல்கி 2898 ஏடி’ திரைப்படத்துக்கு எதிராக ஹாலிவுட் கலைஞர் திருட்டு சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்.

கல்கி படத்தின் எந்த ஒரு போஸ்ட் வெளியானாலும் அதைப் பார்க்க ஃபிரெஷ்ஷாகவே இல்லை என்றும் ஸ்டார் வாஸ், டூன் படங்களின் காப்பி போன்றே தெரிவதாக நெட்டிசன்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

Prabhas Kalki 2898 AD Bujji Kamal Haasan Keerthy Suresh plagiarism 2898


இந்நிலையில், படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற ஒரு காட்சி அப்படியே தான் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாக்கிய காட்சி என ஹாலிவுட் கலைஞர் போஸ்ட் போட்டு கழுவி ஊற்றியுள்ளார்.

பெரிய பட்ஜெட் படங்களும்: இந்தியாவில் உருவாகும் பெரிய பட்ஜெட் படங்களும் தொடர்ந்து காப்பி மற்றும் திருட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. ஹாலிவுட் படங்கள் போக இங்கே படங்களை இயக்க வேண்டும் என நினைக்கும் இயக்குநர்கள் 500 கோடி ரூபாய் செலவு செய்து படங்களை உருவாக்கினாலும் சொந்தமாக சிந்திக்காமல் ஹாலிவுட் படங்களையே தழுவி எடுப்பதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.

பிரபாஸின் கல்கி:
பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் வரும் ஜூன் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்திற்காக புஜ்ஜி எனும் புதிய கார் ஒன்றை உருவாக்கி அதை மட்டுமே பெரிதாக படக்குழுவினர் புரமோட் செய்து வருகின்றனர். புராண கதைகளையும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களின் கலவைகளையும் மிக்ஸ் செய்து கல்கி படத்தை நாக் அஸ்வின் உருவாக்கியுள்ளார் என தெரிகிறது.

Prabhas Kalki 2898 AD Bujji Kamal Haasan Keerthy Suresh plagiarism 2898

திருட்டு சர்ச்சை: தென்கொரியாவைச் சேர்ந்த சங் சோய் எனும் கிராபிக் ஆர்ட்டிஸ்ட் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாக்கிய ஒரு கலை படைப்பை அப்படியே அவரது அனுமதியின்றி கல்கி படத்தில் திருடி வைத்திருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் சங் சோய் வெளியிட்டு இப்படியெல்லாம் திருடி படம் எடுக்கலாமா என அசிங்கமாக கேட்டுள்ளார். ஹாலிவுட் புராஜெக்ட் ஒன்றுக்காக அவர் உருவாக்கிய கலை படைப்பில் கொஞ்சம் மணல் கலரை மேலே தூவி எடிட் செய்தது போலத்தான் கல்கி படத்தின் காட்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X