Kalki 2898 AD Day2: பிரபாஸ்க்கு அடி மேல் அடி! கல்கி படம் ஃபிளாப்பா? சரிவைச் சந்தித்த 2வது நாள் வசூல்

சென்னை: பாக்ஸ் ஆஃபீஸ் நாயகன் என இந்திய அளவில் புகழ் பெற்ற நாயகன் என்ற அந்தஸ்தினைப் பெற்றுள்ளார் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் வெளியான பாகுபலி, பாகுபலி 2, சலார், ஆதி புருஷ் ஆகிய படங்களுக்கு இந்தியா முழுவதும் மாஸ் ஓப்பனிங் கிடைத்தது. இதில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வசூல் வேட்டை நடத்தியது. அந்த படங்களின் வரிசையில் தற்போது வெளியாகியுள்ள கல்கி 2898 ஏ.டி படம் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதைப்போல் தெரிகின்றது. படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் விதமாக இந்தியாவில் இதுவரை செலவிடப்படாத அளவிற்கு பொருட் செலவு செய்து ஒரு பான் இந்தியா படமாக இல்லாமல் பான் வோர்ல்ட் படமாக கல்கி 2898 ஏ.டி படத்தினை தயாரித்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அன்னா பென், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது. படம் மகாபாரதக் கதையையும் அதிநவீன அறிவியல் வளர்ச்சியையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

Kalki 2898 AD Prabhas

படம் 2டி, 3டி மற்றும் ஐ மேக்ஸ் திரையிலும் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றது. படம் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் உலகம் முழுவதும் முன்பதிவின் மூலம் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 37 கோடிகளை அள்ளியது. இதுமட்டும் இல்லாமல் மும்பையில் இந்த படத்தின் டிக்கெட் ரூபாய் 2300க்கு அதிகபட்சமாக அதிகாரபூர்வமாகவே விற்பனை செய்யப்பட்டது. ஆந்திராவில் படத்தின் ரிலீசினை முன்னிட்டு ரூபாய் 75இல் இருந்து ரூபாய் 125 வரை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது.

Kalki 2898 AD Prabhas

புராஜெக்ட் கே: படம் வெளியாகி உலகம் முழுவதும் பாசிடிவ் ரெஸ்பான்ஸ்களையே பெற்று வந்தது. குறிப்பாக படத்தின் இறுதி 45 நிமிடங்கள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் அளவிற்கு காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. பிரபாஸும் அமிதாப் பச்சனும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியெல்லாம் கூஸ்பம்ஸ்தான். படத்தின் அடுத்த பாகத்திற்கு கொடுக்கப்பட்ட லீட் எல்லாம் வெறித்தனம் என்றே கூறவேண்டும். படம் பார்த்த ரசிகர்கள் புராஜெக்ட் கே என்றால் என்னவென்று தாங்களே விவாதித்து வருகின்றனர்.

Kalki 2898 AD Prabhas

முதல் நாள் வசூல்: படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் முதல் நாள் வசூலே எப்படியும் 200 கோடிகளுக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் மொத்தம் ரூபாய் 191.5 கோடி வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் வந்து கொண்டு இருந்ததால் படம் இரண்டாவது நாளிலும் வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.

Kalki 2898 AD Prabhas

இரண்டாவது நாள் வசூல்: ஒரு படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் குறித்து தகவல்களை வெளியிடும் சாக்நிக் வலைதளம் கல்கி 2898 ஏ.டி படம் இரண்டாவது நாளில் இந்தியாவில் ரூபாய் 54 கோடி வசூல் செய்துள்ளது எனவும், தெரிவித்துள்ளது. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 100 கோடிகளைக் கடந்த நிலையில் இரண்டாவது நாளில் 54 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X