Kalki 2898 AD Day4: 1000 கோடி டார்கெட்.. பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையைக் கிளப்பும் கல்கி வசூல் விபரம்!
சென்னை: இந்திய சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் படங்கள் தென்னிந்திய சினிமாக்களில் இருந்து அதிகம் வெளிவரத்தொடங்கிவிட்டது. குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இருந்து அடுத்தடுத்த படங்கள் உலகத்தரத்திற்கு வெளியாகிக் கொண்டு வந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் வரிசையில் தற்போது கல்கி 2898 ஏ.டி படமும் இணைந்துள்ளது. ஒருகாலத்தில் இந்திய சினிமா என்றாலே அது இந்தி சினிமா தான் என நினைத்துக் கொண்டு இருந்தவர்கள் பலர். ஆனால் இன்றைக்கு தென்னிந்தியாவில் இருந்தும் இந்திய சினிமா எனக் கூறும் அளவிற்கு உலக அளவிலான கவனத்தைப் பெறும் பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகின்றது.
தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் கல்கி 2898 ஏ.டி படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியானது. படத்தினை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை நாக் அஸ்வின் தயாரித்துள்ளார். படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க கமல் ஹாசன் வில்லனாக நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், தீஷா பதானி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அமெரிக்காவிலும் படம் வசூலைக் குவித்து வருகின்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குநர் நாக் அஸ்வின் வீடியோ வெளியிட்டிருந்தார்.

1000 கோடி டார்கெட்: இந்நிலையில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருப்பது, கல்கி 2898 ஏ.டி படம் எப்போது ரூபாய் 1000 கோடிகளை வசூல் செய்யும் என்பது தொடர்பாகத்தான். நேற்றே அதாவது ஜூன் 30ஆம் தேதியே படக்குழு படம் 500 கோடிகளை வசூல் செய்துவிட்டதாக அறிவித்தது. இப்படியான நிலையில் இன்று அதாவது ஜூலை ஒன்றாம் தேதி அதிகாரப்பூர்வ அறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கல்கி 2898 ஏ.டி படம் ரிலீஸ் ஆகி முதல் நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

வசூல் விபரம்: ஒவ்வொரு நாள் வசூல் குறித்தும் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்து வருகின்றது. அதன் அடிப்படையில் படம் ரிலீஸ் ஆன தினத்தில் ரூபாய் 191.5 கோடிகளை வசூல் செய்தது. இரண்டாம் நாளில் முதல் இரண்டு நாட்களும் சேர்த்து ரூபாய் 298.5 கோடி வசூல் செய்தது. முதல் மூன்று நாட்களில் ரூபாய் 415 கோடிகளை படக்குழு வசூல் செய்தது.

500 கோடியைக் கடந்த வசூல்: இந்நிலையில் முதல் நான்கு நாட்களில் படத்தின் வசூல் எவ்வளவு கோடிகள் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் நான்கு நாட்களில் படம் ரூபாய் 555 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் இந்த வார இறுதிக்குள் 1000 கோடிகளை நெருங்கிவிடும் என்றும் அடுத்த வாரத்தில் ஆயிரம் கோடி வசூலைக் கடந்து விடும் என்றும் கூறப்படுகின்றது. படத்தின் ஓடிடி உரிமம் ஏற்கனவே ரூபாய் 175 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதால், தயாரிப்பு நிறுவனம் தற்போது லாபங்களை அறுவடை செய்துகொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications











